உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 24.pdf/332

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மாணிக்கவாசகர் வரலாறும் காலமும் - 3

323

தெனக் கூறிற்றிலது. அவ்வாறாக ஒரு நியதியுமன்றித் தம்மனம் போனவாறு அதற்குப் பொருள் செய்தலில் நம் ராவ் அவர்களேயன்றி வேறு ஏவர் வல்லார்!

னிப், புத்தரோடு சுவாமிகள் தில்லைச் சிற்றம்பலத்தில் வாது புரிவதைப் பார்க்கப் பாண்டியனும் ஈழமன்னன் ஒருவனும் வந்து அப்போதங்குவந்த சோழனை வணங்கித் திறை தந்தனரென்பது திருவாதவூரர் புராணத்திற் குறிக்கப்பட்டிருக் கிறதென்றும், அங்ஙனம் பாண்டியர் சோழமன்னர்க்குக் கீழ்ப்பட்ட காலம் 10 நூற்றாண்டு முதல் 13 ஆம் நூற்றாண் டிறுதி வரையுமாம் என்றும், அதனால் மாணிக்கவாசகர் காலமும் அவ் விடைப்பட்ட காலத்திலே தான் வைக்கற்பாற் றென்றும் ராவ்அவர்கள் கூறுகிறார்கள்.

வ்

தில்லைச் சிற்றம்பலத்திற் சோழனுக்குப் பாண்டியன் திறைகொணர்ந்து செலுத்தினான் என்றது முழுப் பொய்யுரையாம். அத் திருவாதவூரர் புராணத்தை யாம் பன்முறையும் படித்துப் பார்த்தோம். அதன்கண் ஈழமன்னன் ருவன் திறை கொணர்ந்து வைத்துச் சோழவேந்தனை வணங்கினதாக மாத்திரம் சொல்லப்பட்டிருக்கின்றது; அது, “ஈழவன நாடனு மெழுந்தடி பணிந்து திறையிட்ட குறைநல்கி” என்னும் அப் புராணச்செய்யுட்களால் அறியப்படும். விலங்கை மன்னனைத் தவிர வேறு மன்னர்கள் அங்கு வந்ததாகவேனும், பாண்டியன் வந்து சோழனைப் பணிந்ததாகவேனும் அப் புராணம் எங்கும் தேடித் தேடிப் பார்த்துக்கண்டிலேம். இவ்வாறாக வ்வாறாக இல்லாத தொன்றனை இருப்பதாக வைத்துப் பொய்யுரைகூறித் தருக்கம் நிகழ்த்த முன்வருதலில் ராவ்அவர்கள் முன்னதாக அறிவுடையோரே கூறக்கடவர்.

இனி, வரகுணபாண்டியனொருவனை மாணிக்கவாசகர் தம் திருவாக்கிற் குறிப்பிடக் காண்டலானும், அவ் வரகுணன் காலம் 9 ஆம் நூற்றாண்டென்று துணியப்படுதலானும், சுவாமிகள் காலம் அவ்வொன்பதாம் நூற்றாண்டிற்குப் பின்னரேதான் பெறப்படுதல் வேண்டும் என்கின்றார் ராவ். இன்னும் சேஷகிரி சாத்திரியார் காட்டிய பாண்டிய வமிசாவளிப் பட்டியில் ஒரே வரகுணன் காணப்படுதலால்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_24.pdf/332&oldid=1590998" இலிருந்து மீள்விக்கப்பட்டது