உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 24.pdf/331

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

322

மறைமலையம் - 24

என்னாம்! அற்றேல், பராந்தகச் சோழன் பொன்வேய்ந்த பிறகு செம்பொன்னம்பலம் என்று பெயர் வந்ததென்னுங் கூற்று எவ்வாறாமெனின்; அஃது அறிவில் கூற்றாமென்றே மறுக்க. பராந்தகன் பிற ஆலயங்களுக்குச் செம்பொன் முகடு வேயாது இத்தில்லைச் சிற்றம்பலத்திற்கு மாத்திரம் அங்ஙனம் பொன்முகடு வேய்ந்த காரணம் என்னையென்று நுணுகியாராய வல்லார்க்கு, அவ்வம்பல முகடு பண்டைக்காலந் தொட்டு அங்ஙனம் பொன் வேயப்பட்டு வந்த காரணத்தானே பராந்தக வேந்தனும் தன் காலத்து அதனைப் புதுப்பித்து அங்ஙனம் பசும்பொற்றகடு வேய்வானாயிற் றென்பது தற்றென விளங்காநிற்கும். பராந்தகனுக்கு முன்னரிருந்த பெருந்தமிழ் வேந்தர் பொன்வேயாது விட்டிருந்தனர் என்பதனை ராவ் எந்தச் சிலாசாசனத்திற் கண்டரோ அறியேம். ஆரிய அபிமானத்தாற் கட்டி இறுகிய தம் மனோபாவகச் சிலையிற் கண்டார் போலும்! அப்பர் சுவாமிகள் திருவாக்கால் பராந்தகனுக்கு முன்னும் தில்லைச்சிற்றம்பல முகடு பொன்வேயப் பட்டிருந்த தென்னும் உண்மை உள்ளங்கை நெல்லிக்கனி போலினிது பெறப்படுதலின், மாணிக்கவாசக சுவாமிகள் பொன்னம்பலம் என்று தந்திருவாக்கிற் கூறியது கொண்டே அவர் பராந்தகனுக்குப் பின்னிருந்தாரெனும் ராவ் அவர்கள் உரை பொருளோடு புணராப் போலியுரை யாமென்க.

இனித் தசூக்ஷிணா மூர்த்தியுபாசனை மாணிக்கசு வாமிகளுக்குப் பின்னர்தான் தோன்றியதென ராவ் அவர்கள் ஊகம் செய்கின்றனர். அவ்வூகம் காரணமின்றி அவரது வெறும் பாவனைக்கட் டோன்றுதலின் அதனை அறிவுடையோர் கொள்ளாரென்பது. தக்ஷிணாமூர்த்தம் ஜனகர் முதலான முனிவர் நால்வர்க்கு அத்துவித உண்மை ம உணர்த்துதற் பொருட்டுக் கொண்ட பழைமை அருட் கோலமென்பது எல்லார்க்கும் ஒப்பமுடிந்ததாகலின், அதனைப் பிறிதாகக் கூறுதல் பொருந்தாதென மறுக்க. இன்னும் இன்னும் முதலாம் குலோத்துங்கசோழன் தக்ஷிணா மூர்த்திக்கு மானியம் விட்டான் என்று கூறிய திருக்கண்டேசுர ஆலய சாசனத்தைக் கொண்டு அப்போதுதான் மூர்த்தி உபாசனை தொடங்கியதென்றல் பெரியதோர் குழறுபடை யாம். அது மானியம் விட்டமை கூறியதே யன்றி அப்போது தான் அவ்வுபாசனை தோன்றிய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_24.pdf/331&oldid=1590995" இலிருந்து மீள்விக்கப்பட்டது