உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 24.pdf/330

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

―

3

மாணிக்கவாசகர் வரலாறும் காலமும் 3

321

முட்டிய குரீஇப் போலப் பெரிதும் இடர்ப்பட்டு அதனை விலக்கி விடுவார் போல்அப்பர் திருவாக்கில் வந்த 'பொன்னம்பலத்'திற்குப் பொன்னனைய அம்பலம் என்பது பொருள்போலத் தோன்றுகின்றதென நெகிழ்ந்துரையாடிப் போனார்.

ராவ் அவர்களுக்கு இங்ஙனம் நடுநிலை வழீஇ ஓரம பேசி இழுக்குறும் திரிவுபாடு வந்ததென்னை யெனின்; தமிழ்த் தேயத்துப் பெரியாருள் யாரும் பழைய காலத்திருந் திலர் என்று நாட்டவும், தம்மை யொத்த ஆரியப் பெரியாரே பழைய காலந்தொட்டு நாகரிகமுடையரா யிருந்தன ரன்று காட்டவுமே புக்காராகலின் அங்ஙனந் தன்னைப் பற்றுதல் என்னுங் குற்றத்திற்பட்டுப் பொருள் உண்மை தேராது ராவ் வழுக்கினார் என்க. அது கிடக்க.

அப்பர் சுவாமிகள் திருவாக்குக்குப் பொன்போன்ற அம்பலம் என்று பொருள்பண்ணவந்த ராவ் அவ்வாறே மாணிக்கவாசக சுவாமிகள் திருவாக்குக்கும் பொன்னனையை அம்பலம் என்று பொருள் செய்யாது விட்டதென்னை? ஒரே

கையான ஒரு சொற்றொடர்க்கு ஒருகால் ஒருவாறும் பிறிதொருகாற் பிறிதொருவாறும் பொருள் பண்ணுதற்கு இவர்கொண்ட காரணம் யாது? காரணமின்றித் தமக்கியைந்த வாறெல்லாம் பொருள்செய்தால் இவர்போற் றிரிபடையாத நல்லறிவுடையார் இவருரைக்கு இணங்குவாரா? மேலும் அப்பர் சுவாமிகள் பொன்போன்ற அம்பலம் என்று பொருள் செய்வதற்கு இடந்தராமல் 'உரையாணி மாற்றுள்ள செம்பொன்னாற் செய்த அம்பலம்' என்றும் 'கதிர்விரியும் செம்பொன் அம்பலம்' என்றும் 'பரிசுத்தமான செம்பொற்ற கடு எழுதி மேல்மூடிய சிற்றம்பலம்' என்றும், 'பொன்னாற் செய்யப்பட்ட அம்பலம்' என்றும், இனிது பொருள் விளங்குமாறு ஆணியைச் செம்பொனம்பலம் சுடர்ச் செம்பொனம்பலம்" தூய செம்பொன்னினால் எழுதி வேய்ந்த சிற்றம்பலம்” என்று திருக்குறுந் தொகையிலும்,” பொன்னாகிய தில்லைச் சிற்றம்பலவன் என்று திருவிருத்தத்தினும்

அருளிச்செய்திருப்ப இவற்றை யறிந்து பொருள்கொள்ளுமா றறியாத ராவ் அவர்கள் தமிழ் நூலாராய்ச்சியிற் புகுந்தது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_24.pdf/330&oldid=1590993" இலிருந்து மீள்விக்கப்பட்டது