உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 24.pdf/329

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

320

மறைமலையம் 24

உமைதிருமுலைப்பாலுண்டு பேரற்புதஞான மூர்த்தியாய்ச் சைவம் எங்கணும் விளக்கிச் சமணரை சமணரை வாதில் வென்ற ஞானசம்பந்தப் பெருமானைப் பற்றிய திருவிளை யாடலைக் கூறாது விடுவரோ? இஃதொன்றானே மாணிக்கவாசகர் ஞானசம்பந்தர்க்கு முன்னிருந்தா ரென்பது சிறுமகார்க்கும் இனிது விளங்கிக்கிடப்பதாக, இதுதானு முணராது ராவ் அவர்கள் காலவரையறை செய்யப் புகுந்தது நகையாடற் பாலதொன்றாம். மேலும் அப்பர் திருஞானசம்பந்தர் திருவாக்குகளில் திருவிளையாடல்கள் பலவந்திருக்கின்றனவே யல்லாமல் ராவ் அவர்கள் கூறியபடி சிலவே வந்தில. இவ்வுண்மை தெரியவேண்டுபவர் ஸ்ரீமத்வே. சாமிநாதைய ரவர்கள் தமிழுலகத்தைக் கடமைப்படுத்தி வெளியிட்ட வேம்பத்தூரார் திருவிளையாடல் முகப்பிலே மாணிக்கவாசகர் திருவாக்கினும் மூவர் திருவாக்கினும் போந்த திருவிளையாடல் களையெல்லாம் மிக்க பிரயாசை யோடு தொகுத் தெடுத்துப் பிரசுரித் திருக்கின்றார்களாதலின் ஆண்டுக் கண்டு காள்க. அங்ஙனம் காணவல்லவர்

ராவ் அவர்கள் கூறியது

முழுப்பொய்யுரையே யாமென்று தேர்வர். மாணிக்கவாசக சுவாமிகள் தங்காலத்தும் தம் காலத்திற்கு முன்னும் நடந்த திருவிளையாடல்கள் பலவற்றை விதந்தெடுத்துக் கூறுதல் போலவே, ஏனைச் சமயகுரவன்மாரும் தங்காலத்துந் தமக்கு முன்னும் நடந்த பலவற்றை எடுத்துக் கூறுகின்றனர். அது கிடக்க.

இனிக் கி.பி.904 இல் அரசாண்ட பராந்தகச் சோழன் தில்லைச் சிற்றம்பல முகட்டைப் பொற்றகடு வேய்ந்து சிறப்பித்த பின்னரே அவ் வம்பலத்திற்குப் பொன்னம்பலம் என்று பெயர் வந்ததென்றும், மாணிக்கவாசக சுவாமிகள் கீர்த்தித்திருவகவலில் “அம்பொற் பொலிதரு புலியூர்ப் பொதுவினில் நடம் நவில்" எனவும், திருக்கோவையாரில் "சேணிற் பொலி செம்பொன் மாளிகைத் தில்லைச்சிற் றம்பலத்து” எனவும் கூறுதலோடு கோயில் மூத்த திருப்பதிகம் முழுவதூஉம் இப்பெயரே வரப் பாடுதலாலும் அச்சுவாமிகள் பராந்தகச்சோழன் காலத்திற்கும் பின்னரேதான் இருந்திருக்க வேண்டுமென்றும் கூறிய ராவ் அவர்கள் அப் பராந்தகனுக்கு முன்னிருந்த அப்பர் சுவாமிகளும் 'செம்பொன்னம்பலம்” எனக் கூறியிருத்தலை உணர்ந்து குன்று

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_24.pdf/329&oldid=1590991" இலிருந்து மீள்விக்கப்பட்டது