உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 24.pdf/328

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யான்

  • மாணிக்கவாசகர் வரலாறும் காலமும்

3

319

"நின்கழற் புணைகொண்டு, இழிகின்ற அன்பர்கள் ஏறினர்வான் இடர்க்கடல் வாய்ச் சுழிசென்று க என்றும் அருளிச்செய்தனர்கள். பின்னர்ச் சுவாமிகள் சிவநிட்டைகூடி அருள் வயமாய் நின்ற காலத்து அங்ஙனம் முன்னர்ப் பிரிந்துபோன அவ்வடியாரை யெல்லாம் மறித்தும் அவ் வருள் வெளியிற் கண்டு ஆனந்தமெய்தி, அப்பனான சிவபெருமான் தம்மைத் திரும்பவும் அவரோடு கூட்டிய பேரருட்டிறனை வியந்து “அப்பன் ஆண்டு தன்னடியாரிற் கூட்டிய அதிசயங் கண்டாமே" என்று அதிசயப் பத்து முழுவதும் அருளிச் செய்தனர்கள். இங்ஙனமெல்லாம் சுவாமிகள் திருவாக்கிற் குறித்திடப்பட்ட அடியார்கள் திருப்பெருந்துறையிற் குருநாதன் பக்கல் மேவியிருந்த அடியார் குழாமன்றி ஞானசம்பந்தர் முதலாயினா ரல்லரென்பது. இந் நுட்பம் ஆய்ந்துணர வல்லார்க் கெல்லாம் வெள்ளிடைமலைபோல் விளங்கிக் வரலாறு

கிடந்தது. இஃது ப்பெற்றியதாக இதன்

சிறிதுமோராது சுவாமிகள் இங்கு ‘அடியார்’ என்றது, ஞானசம்பந்தர் முதலாயினாரையே யாமென்று கூறி, அதனாற் சுவாமிகள் ஏனை மூவர்க்கும் பிற்காலத்தினரெனக் கூறிய ராவ் அவர்கள் திரிபுணர்ச்சி பெரிதும் இரங்கற் பாலதொன்றாம் என்க.

இனி மாணிக்கவாசக சுவாமிகள் பல்வேறு திருவிளை யாடல்களைக் குறித்துப் பாடா நிற்ப, ஏனைமூவரும் அவற்றிற் சிலவே கூறுதலாலும், அங்ஙனம்அவை பலவாய்ப் பெருகிய காலம் பிற்காலத்தின் கண்ணதாக வேண்டு தலாலும், அத் திருவிளையாடல்கள் பலவற்றையும் எழுதின வேம்பத்தூரார் திருவிளையாடற் புராணத்திற்கும் பரஞ்சோதிமுனிவர் திருவிளையாடற் புராணத்திற்கும் சிறிதுமுன்னராயினும் பின்னராயினும் மாணிக்கவாசக சுவாமிகள் காலத்தை வரையறுக்க வேண்டுமென ராவ் அவர்கள் கூறுகின்றார்கள்.

இவர்கள் கூறியது பெரிதும் பிழைபடுவ தொன்றாம். மாணிக்கவாசக சுவாமிகள் தமது அருமைத்திருவாக்கில் எடுத்துக் கூறினவெல்லாம் மிகப் பழைமையான திருவிளை யாடல்களேயாம். ஞானசம்பந்த சுவாமிகளுக்குப் பின்னே மாணிக்கவாசக சுவாமிகள் இருந்தனராயின், மூன்று வயதிலே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_24.pdf/328&oldid=1590988" இலிருந்து மீள்விக்கப்பட்டது