உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 24.pdf/327

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

318

மறைமலையம் - 24

னென்பதற்கும், திருவாரூரில் ஞானம் நல்கப்பட்டவர் சுந்தரமூர்த்திகளைத் தவிர வேறடியார்இலர் என்பதற்கும் பிரமாணங் காட்டினாலன்றி ராவ் அவர்கள் உரை புரைபடுதல் திண்ணம் என்க.

அற்றேல், மாணிக்கவாசகர் தமது திருவாக்கில் அடியார் அடியார் எனப் பலகாலும் உரைப்பது யார்தம்மை எனிற் கூறுவாம் : திருப்பெருந்துறையில் எழுந்தருளிய குருநாதனைப் புடைசூழ்ந்திருந்த அடியார்கள், அக்குருநாதன் பிரியும்போது மிகவும் வருந்தாநிற்பப் பின் அக்குருநாதன் அவர் தம்மை நோக்கி 'இம் மடுவினிடையே சோதிமயமான தழற்பிழம்பு ஒன்று தோன்றும், அதில் நீவிர் போய்ப் படிந்து சிவபதம்

பெறுகுவீர்" என்று கட்டளை ளை யி யிட்ட னன். இட்டவாறே

66

அவர்களும் மாணிக்கவாசகரை விடுத்துப் போய் அத்தழற் பிழம்பிற் படிந்து மறந்துபோயினார். தாம் அவ்வடியார் குழாத்தோடு அளவளாவி வரம்பிகந்த மகிழ்ச்சியுற்றிருந் ததனையே சுவாமிகள் கலந்து நின்னடி யாரோடு அன்றுவாளா களித்திருந்தேன், புலர்ந்து போன காலங்கள் என நினைந்து அருளிச் செய்ததும், பின் அவ்வடியார் தம்மைப் பிரிந்து சோதியில் மறைந்ததனையே,

....புகுந்து நின்றது இடர் பின்னாள்

உலர்ந்து போனேன் உடையானே

உலவா இன்பச்சுடர் காண்பான்

அலந்து போனேன் அருள்செய்யாய் ஆர்வங்கூர அடியேற்கே

(அ.பிரார்த்தனைப் பத்து, 1.)

என்றுருகி அருளிச் செய்ததுமாம். இன்னுந் தம்மோடு அங்ஙனம் அளவளாவி யிருந்த அடியார்கள் சிவபதவி பெற யான் அதனைப் பெறாமற் புறம் போனேனே என உள்ளங் கசிந்து சுவாமிகள் “சிவமாநகர் குறுகப்போனார் அடியார் யானும் பொய்யும்புறமே போந்தோமே” என்றும், பேரா உலகம் புக்கார். அடியார் புறமே போந்தேன்யான்" என்றும், “பழைய அடியார்க்குன் அணியார் பாதங் கொடுத்தி” என்றும், "பண்டைப் பரிசே பழஅடி யார்க்கீந் தருளும் என்றும்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_24.pdf/327&oldid=1590986" இலிருந்து மீள்விக்கப்பட்டது