உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 24.pdf/326

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* மாணிக்கவாசகர் வரலாறும் காலமும் - 3

317

காணப்படுகின்றனவென்று ராவ் அவர்கள் எடுத்துக் காட்டிய பிரமாணங்கள் அவர் கொள்கையையே வேரற அறுத்து எமதுகொள்கையை வச்சிரத் தம்பம் போல் நாட்டுவவாயின.

இன்னும் பிற்காலத்தின்கண் இருந்த விஜயநகரத்து நாயக்க மன்னர் கட்டிட அமைப்புக்களே பெரும்பாலுங் காணப்படுதலால் திருப்பெருந்துறைச் சிவாலயத்தின் கர்ப்பகிருகம் ஒன்றுதவிர ஏனையெல்லாம் அவர்களே அமைத்தன வென்று ராவ் அவர்கள் கூறுவதனால் எமது கொள்கை பெரிதும் வலிபெறல் காண்க. என்னை? நால்வர் காலத்திற்கும் பின் யாரோ சிறிதாகக் கர்ப்பகிருகம் ஒன்றுமே கட்டிவைத்தனராக அதனைச் சூழப் பின்னர் வந்த விஜயநகர மன்னர் கட்டிடங்களைப் பெருக்கினாரென்பது பெறப்படு தலின் என்க.

இனி மாணிக்கவாசகர் திருவாசகம் முழுவதூஉம் தொண்டர்களையும் அடியார்களையும் பன்முறை நினைந்து நினைந்து உருகிக் கூறக் காண்டலாலும், அவ் வாக்கியங்களை உணரும்போது அப்பரையும், ஞானசம்பந்தரையும், சுந்தரரையுமே குறிக்கின்றா ரென்பது புலப்படுதலாலும் மாணிக்கவாசகர் அம் மூவர்க்கும் பின்னையோர் என ராவ் அவர்கள் மொழிகின்றனர்.

L

இத்தருக்கம் என்நுட்ப முடையது! புராணங்களானும், திருவாசகத் திருவாக்கானும், ஏனை ஆன்றோர் பரம்பரை உரையானும் நரிபரியானது மாணிக்கவாசகர் பொருட்டே எனக் கூறப்பட்டிருப்ப, அதனைப் பொருந்தாதென்று மறுத்த ராவ் அவர்கள் ‘அடியார்’ என்று பொதுப்படக் கூறும் சுவாமிகள் திருவாக்குக்கு ஏனை மூவர் என்று பொருள் கொண்டது பெரியதொரு தலைதடுமாற்ற வுரையன்றிப் பிறிதென்னை? “கழுமல மதனிற் காட்சி தந்தருளியதையும்’ ஞானசம்பந்தரையும் சுந்தரரையுங் குறித்தனவாக ராவ்

காண்ட

அவர்கள் பொருள்படுத்தற்குக் ஆதார மென்னையோ? அவ்வாதாரம் ராவ் அவர்கள் சுவாமிகள் காலத்தைப் பிற்படுத்த வேண்டு மென்று கொண்டு முதிர்வித்த கனவு நிலையில் உளதுபோலும்! ஞானசம்பந்தரைத் தவிர வேறடியார்க்குக் கழுமலத்திற் காட்சி கொடுத்திலன் நம்பெருமா

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_24.pdf/326&oldid=1590984" இலிருந்து மீள்விக்கப்பட்டது