உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 24.pdf/325

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

316

மறைமலையம் - 24

தருளியவாறுங் காண்க. 'திருவுத்தர கோசமங்கைக் கரசே” என விளித்துக் கூறுவதெல்லாம் ஆங்குத் தழலுருவாய்த் தோன்றிய சிவபெருமானை யல்லது வேறில்லை யென்க. ஆகவே, உத்தரசோகமங்கை ஊரிலும் மாணிக்கவாசகர் காலத்திற் சிவாலயமிருந்ததில்லை யென்பது இனிது துணியப்படுவதாம். ராவ் அவர்களும் இவ்விரண்டு கோவில்களும் பழைய காலத்தன அல்ல என்கின்றார். அதுநிற்க.

இனி மாணிக்கவாசகர் காலத்தும் அவர்க்குச் சில நூற்றாண்டு பிற்றோன்றிய அப்ப மூர்த்திகள் முதலான ஏனைச் சமயாசிரியன்மார் மூவர்காலத்தும் திருப்பெருந் துறையும் திருவுத்தரகோச மங்கையும் சிவாலயங்கள் உடையவாயில் லாமையால், சிவாலயமுள்ள தலங்களுக்கே சென்று திருப்பதிகங் கட்டளையிடும் கடப்பாடு உடை யரான சமயாசிரியர் மூவரும் அவ் வூர்களைத் தம் திருவாக்கிற் குறியாது விட்டனர். ஆகையால் அவர்கள் குறியாது விட்ட காரணம் இன்னதென்று பகுத்துண ராமலும் மாணிக்கவாசகர் காலத்து அக் கோயில்கள் கட்டப்படவில்லை என்பதுணராமலும், தேவாரத்தில் அத்தலப்பெயர்கள் வராதது ஒன்றே பற்றி மாணிக்கவாசகர் அம் மூவர்க்கும் பிற்பட்டவரென்று கூறிய ராவ் அவர்கள் உரைப்பொருள் பொருத்த மின்றாமென விடுக்க.

அற்றேல், திருப்பெருந்துறை, திருவுத்தர கோசமங்கை என்னும் அத்தலங்கள் உற்பத்தியாயவாறு தான் என்னை யெனிற் கூறுதும்: மாணிக்கவாசகர்க்கும் ஏனைச் சமயாசிரியர்க்கும் பிற்காலத்தே திருவாசகம் மிகுதியும் ஓதப்படுவதாயிற்று. அங்ஙனம் ஓதப்படுகின்றுழி அவ்விரண் டிடங்களும் பெருமானால் சிறந்தெடுத்துச் சொல்லப்படுத லாலும், ஒன்றிற் பிறவியறுக்கும் மெய்ப்பொருளுபதேசமும் மற்றொன்றில் நிட்டைகூடிப் பெற்ற மெய்யனுபவசித்தியும் அப் பெருமானுக்கு விளைந்தமையாலும்,இவையெல்லாம் பிறர் நினைவு கூர்ந்து உய்தற்பொருட்டுப் பிற்காலத்தரசர்கள் அவ் விரண்டிடத்தும் சிவாலயங்கள் விரிவுபடக் கட்டிவைப் பாராயினர். பிற்காலத்தினரான விஜயநகரத்தரசர் சிலாசாசனங்களும் பாண்டிய ய அரசர் சாசனங்களும் திருப்பெருந்துறையிலும் திருவுத்தர கோசமங்கையிலும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_24.pdf/325&oldid=1590981" இலிருந்து மீள்விக்கப்பட்டது