உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 24.pdf/324

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மாணிக்கவாசகர் வரலாறும் காலமும் -3

315

இனித், திருவுத்தரகோசமங்கையி னியல்பை ஒரு சிறிது ஆராய்வாம்: மாணிக்கவாசகப் பெருமானைப் பெருந் துறையிலே விட்டுக் குருநாதன் நீங்கும்போது, தன்னைப் பிரிந்திருக்கமாட்டாமையால் தாயைப் பிரிந்து வருந்தும் கன்றுபோற் கரைந்து கரைந்து உருகியழும் தன் அன்பரை நோக்கிப் பூங்காவினிடை நின்ற ஒரு மடுவைச் சுட்டிக் காட்டி, “இம் மடுவின் நடுவிலே சோதிமயமான ஒரு தழற்பிழம்பு தோன்றும், அப்போது நம் அடியரெல்லாஞ் சென்று அதன்கண் வீழ்ந்து நம்பாற் சேர்குவர்; நீயும் அவ்வாறு அவரோடு உடன்சென்று விழாமல் 'உத்தர கோசரமங்கை யென்னும் நம் ஊரிற் சென்று, சித்தி யங்கு எவையும் எய்தி’ அதன்பின் நஞ் சிவலிங்கவடிவு வைத்த சிவதலங்கடோறுஞ் சென்று வருகுவையாயின் அங்கங்கும் இத் தழற்பிழம்பு வடிவே காண்பாய். இறுதியாகச் சிதம்பரம் போந்து அங்கே புத்தரை வாதில் வென்றபின் சிவபெரும்பதம் பெறுகுவை”, என்று அக் குருமூர்த்தி அருளிச்செய்ததாகத் திருவாதவூரர் புராணங் கூறுகின்றது. இங்கே, உத்தரகோசமங்கையைச் சிவலிங்கம் வைத்த தலமாகக் கூறாமல், மற்றைத் தலங்களையே அது வைத்ததாகக் கூறினமையே கவனிக்கற்பாலதாம். மாணிக்க வாசகர் தம் சிவநிட்டை கைகூடுதற்காகவே அந்நிட்டை மெய்ப்பொருள் தேற்றிய குருநாதன், திருப்பெருந்துறைப் பூங்காவோ டொப்பப் பொழில்கள் நிறைந்து நிட்டை புரிதற்குப் பெரிதும் அனுகூலமுடைத்தாய் விளங்கும் திருவுத்தரகோச மங்கையூர்க்கு ஏகுகவென்று ஏவினாரென்பது மேலதனால் தெளியற்பாலதாம். அதனால் திருவுத்தரகோ சமங்கையில் அந்நாளிற் சிவாலய மிருந்ததின் றென்பதூஉம் பெறப்படுவதே யாகும். மெய்ப்பொருள் வழாதுகூறும் இத் திருவாதவூரர் புராணவுரைக்கு ஏற்பவே மாணிக்கவாசகப் பெருமானும் தன்னருமைத் திருவாக்கால்,

அளிதேர்விளரி,

ஒலிநின்ற பூம்பொழில் உத்தரகோசமங்கை.

66

"அணிபொழில் பாழில் உத்தர கோசமங்கை" என நீத்தல் விண்ணப்பத்தினும், "தெங்குலவு சோலைத் திருவுத்தர கோசமங்கை எனத் திருப்பொன்னூசலினும் கிளந்தெடுத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_24.pdf/324&oldid=1590979" இலிருந்து மீள்விக்கப்பட்டது