உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 24.pdf/323

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

314

மறைமலையம் - 24

திருவாசகத்தினாற் பெறப்படுகிறதே யல்லாமல் அங்கே சிவாலயமிருந்ததாக நினைவுற்றுருகினரென்பது சிறிதும் புலப்படவில்லை.

குதிரை

அற்றேலஃதாக, மாணிக்கவாசகர் தாங் வாங்குவதற்கென்று கொண்டு சென்ற பொருட்டிரளை யெல்லாம் எங்ஙனம் செலவிட்டாரெனின்; கூறுதும்: மாணிக்கவாசகர் தங்குருநாதனுக்கு உடல் பொருளாவி மூன்றனையும் உரிமைப்படுத்துங்கால் தாங்கொண்டுவந்த பொருட்டிரள் முழுவதூஉம் குருநாதன் றிருவடியிலே ய்த்தார். அப் பொருட்டிரளைக் குருநாதன் தன்சீடர் குழாத்தின்பால் உய்த்துத்,

திருந்திய பொருளி தெல்லாம்

திருப்பணிக் களியும் மேலாம். அருந்தவர்க் குதவும் இல்லா

தலந்தவர்க் கருளு மென்றார்

என்று

கூறியதாகத் திருவாதவூரர் ர் புராணத்தின்கட் சொல்லப்படுதலின், அங்கிருந்த அவ்வடியவர்கள் எல்லாரும் அப் பொருட்குவையைச் சிவாலயத் திருப்பணி கட்கும், அரியதவசிகடக்கும், வறியவர்கட்கும், கொடுத்துச் செலவிட்ட டன ரென்பது பெறப்படும், நன்று சொன்னீர், 'திருப்பணிக்கு அளியும்’ என்றதனானே பெருந்துறையிற் புதிதாக ஒருகோயில் கட்டுவித்தார் எனல் பெறப்படுமன்றோ வெனின்:அறியாது கூறினீர், திருப்பணி' என வாளா கூறினமையானே

தமிழ்நாட்டின்கண் முன்னமேயுள்ள சிவாலயங்கள் புதுப்பிக்குஞ் செலவுக்குக் கொடுத்தா ரென்பது பெறப்படுவதல்லாமல், அதுகொண்டு புதுவதாக ஒருகோவில் கட்டுவித்தாரென்பது பெறப்படாது. அன்றி அவ்வாறு ஒன்று கட்டுதற்கென்றே கொடுத்தாரெனக் கொள்வேமெனினும், அச் செய்யுளைத் தொடர்ந்துவரும் பிற செய்யுட்களிற் கோயில் கட்டுவித்த விஷயம் ஒரு சிறிதும் குறிக்கப்படாமையின் அவ்வாறு கோடல் போலியுரையா மென விடுக்க. எனவே, மாணிக்கவாசகர் காலத்தில் திருப்பெருந்துறை சிவாலயமுடையதாயில்லை யென்பது நிறுவப்பட்டமை காண்க.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_24.pdf/323&oldid=1590977" இலிருந்து மீள்விக்கப்பட்டது