உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 24.pdf/334

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* மாணிக்கவாசகர் வரலாறும் காலமும்

325

காலத்தில் நாகபட்டினத்தின்கண் ஒரு பௌத்தப் பள்ளியிருந்தமையே சான்றாமென்றும் ராவ் அவர்கள் கூறுகின்றனர்.

புத்தசமய மிருந்தகாலத்தே சமண மதமும் உடனிருந்ததாயினும் அது மிகவும் செழிப்புற்று ஓங்கியது ஐந்தாம் நூற்றாண்டின் பின்னரேயாம். ஐந்தாம் நூற்றாண்டிற்கு முன்னெல்லாம் புத்தமதமே மேலோங்கியிருந்தது. இதற்குச்

சான்று மணிமேகலையும் சீவகசிந்தாமணியுமேயாம்.

அது

மணிமேகலை பௌத்தம் மேலோங்கிய முதல் நூற்றாண்டிலும், சீவகசிந்தாமணி சமணம் மேலோங்கிய ஏழாம் நூற்றாண்டிலும் எழுதப்பட்ட நூல்களாம். ஐந்தாம் நூற்றாண்டிற்குப் பின்னும் ஒரோவிடத்துப் பௌத்தமதம் இருந்ததென்றதனால் ஈண்டைக்கு ஆவதோர் இழுக்கில்லை. என்னை? பிற்காலத்துத் தன்பெருமை சுருங்கி ஒளிமழுங்கிக் கிடந்ததாகலின், இனி மாணிக்கவாசக சுவாமிகளிருந்த காலத்துப் பௌத்தமதம் மிகவும் விரிந்து வலிபெற்றிருந்ததென அறியப்படுதலால் அக்காலமும் மாணிக்கவாசகர் காலமும் ஐந்தாம் நூற்றாண்டிற்கு முற்பட்டனவா மென்பது ஒருதலை. ஆகவே, இவ்வுண்மை யொடு முரணி ராவ் அவர்கள் கூறியது பொருத்தமில் போலியுரையாமென மறுக்க.

இவ்வாறு இதுகாறும் கூறிய மறுப்புரைகளால், ஸ்ரீ.து.அ. கோபிநாத ராவ்அவர்கள், எம்., மாணிக்கவாசக சுவாமிகள் காலம் கி.பி.பதினோராவது நூற்றாண்டின் துவக்கம் அஃதாவது இற்றைக்கு எண்ணூற்றெட்டு வருடங்களுக்குமுன் என்று நிலையிடுதற் பொருட்டுக் காட்டிய ஆதாரங்கள் அவ்வளவும் உள்ளீடில்லா வெறும் பதடியா மென்பதனைப் பகுத்துப் பகுத்துக்காட்டி விளக்கினேம். இனி யாம் 1890 ஆம் ஆண்டு ஞானசாகர முதற்பதுமத்திற் பிரபல காரணங்கள் பலவாற்றால் மாணிக்கவாசக சுவாமிகள் கி.பி. மூன்றாவது நூற்றாண்டு அஃதாவது இற்றைக்கு ஆயிரத்து அறுநூற்றெட்டு வருடங்களுக்கு முன் இருந்தார்களென்று நாட்டியதே பொருத்தமுறுவதாம். அதனை இங்கு மற்றுமோர் ஆதாரங் காட்டி முடிப்பாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_24.pdf/334&oldid=1591002" இலிருந்து மீள்விக்கப்பட்டது