உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 24.pdf/335

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

326

  • மறைமலையம் - 24

மாணிக்கவாசக சுவாமிகள் அப்பர் சுவாமிகளுக்கு முன்னிருந்தா ரென்பதனை நிலைபெறுத்தவே அவர் காலம் இதற்குமுன் னன்பது நாட்டப்பட்ட வாறாகும். அப்பர்சுவாமிகள் "நரியைக் குதிரை செய்வதாகும்” என்றது மாணிக்கவாசகர் பொருட்டு நிகழ்ந்த திருவிளையாடலைக் குறித்த தென்பதனை முன்னரே காட்டினேம். திருப்பூவணத் திருப்பதிகத்தினும் அப்பர் சுவாமிகள் “மணியார் வைகைத் திருக்கோட்டி னின்றதோர் திறமுந் தோன்றும்" என்று அருளிச்செய்து மாணிக்கவாசகர் பொருட்டாகவும் சிவபெருமான் வையையை யடைக்க மண்சுமந்து அதன் கரையில் நின்ற திறத்தை விளக்கி அருளினார். மேலும், அப்பர் சுவாமிகள் தமது அருமைத் தனித்திருத்தாண்டகச் செய்யு ளான்றில் குடமுழ நந்தீசனை வாசனாக் கொண்டார்?” என்று சுவாமிகளின் பெயராகிய வாசகன் என்னுஞ் சொல்லையும் வெளிப்படையாக எடுத்துக் கூறியருளினார். இம் மூன்று அரிய குறிப்புக்களானும் மாணிக்கவாசகர் அப்பர் சுவாமிகள் காலத்திற்கும் முற்பட்டவராதல் தெற்றென விளங்குகின்றது. இனி மாணிக்கவாசகப் பெருமானிருந்த காலவரம்புதான் யாதோவெனின்; அஃது இற்றைக்கு ஆயிரத்து அறுநூற்றெட்டு வருடங்களுக்கு முற்பட்ட மூன்றாம் நூற்றாண்டிலாமென ஞானசாகர முதற்பதுமத்தின்கண் இனிது விளக்கினாம்; ஆண்டுக் கண்டுகொள்க.

66

குறிப்பு: "பெருந்துறை' என்னுந் தலம் அப்பர் சுவாமிகள் முதலானாராற் குறிக்கப்படவில்லை யென்பதூ உம் பொருந்தாதாம். அப்பர் சுவாமிகள் தாம் அருளிச் செய்த க்ஷேத்திரக் கோவைத் திருத்தாண்டகத்தில் "பேரூர் பிரமபுரம் பேராவூரும் பெருந்துறை காம்பிலி பிடவூர் பேணும்”1 என்று அத்தலத்தை எடுத்தருளிச் செய்தனர்கள். அற்றேல் அதற்குத் தனிப்பதிகங்கள் காணப்படாதவா றென்னையெனின்; யாம் முன்னரே காட்டியவாற்றால் அது மாணிக்கவாசக சுவாமிகள் குருநாதனைக் கண்டு உபதேசம் பெற்ற மாட்சிமையானே சிறப்பெய்திய தன்றி, அதன்கட் சிவாலயம் முன்னில் லாமையால் அதற்குத் தனித்திருப்பதிகம் இல்லாதாயிற் றென்க.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_24.pdf/335&oldid=1591005" இலிருந்து மீள்விக்கப்பட்டது