உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 24.pdf/336

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மாணிக்கவாசகர் வரலாறும் காலமும் 3

327

இவ்வாராய்ச்சிக்கு அரண் செய்யும் அப்பர் அருட்பாடல்

திருவாதவூரடிகளின் திருவரலாற்றையும், காலத்தையும் சிறிதும் ஐயத்திற்கு இடமின்றித் துணிவுபெறுத்தும் சான்றுகள் பலவற்றுள்ளும் முதன்மைபெற்று விளங்குவன திருநாவுக்கரசு நாயனார் அருளிய “நரியைக் குதிரைசெய் வானும்"(4-4-2) என்னும் திருப்பாட்டும், "குராமலரோ டராமதியஞ் சடைமேற் கொண்டார்” குடமுழநந் தீசனைவா சகனாக் கொண்டார்” (6- 69-11) என்னும் திருப்பாட்டும் ஆகிய இரண்டுமே யாகும்.

இவற்றைப் பற்றிய விளக்கம் ஆசிரியர் மறைமலை யடிகளாரால் 167, 277,906, 918,920, 940,941, முதலிய பக்கங்களிற் காணப்படுகின்றது. 'நரியைக் குதிரை’ யாக்கிய இறையனார் திருவருட்செயல் அத் திருநாவுக்கரசு நாயனார் அருளிய திருக்குறுந்தொகைத்

திருப்பாட்டின்

காணப்படுகின்றது. அது வருமாறு:

எரிய னாரிறை யாரிடு காட்டிடை நரியினார்பரி யாமகிழ் கின்றதோர் பெரிய னார்தம் பிறப்பொடு சாதலை விரிய னார்தொழும் வீழி மிழலையே.

பெரியனார் -மாதேவர். விரியினார் -நீங்கினார்.

கண்ணும்

- 5.112 - 8

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_24.pdf/336&oldid=1591007" இலிருந்து மீள்விக்கப்பட்டது