உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 24.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

―

மாணிக்கவாசகர் வரலாறும் காலமும் 3

87

ஆசிரியர் கருத்தையும் பிறழ்த்தித், தாம் வேண்டியவாறெல்லாம் உரை யுரைப்பதும் மெய்யுரை யாகுமா?

எவரது

எனவே, தன்னாட்டுச் சைவமுனிவரர் அருளுரையுந் தமது மருளுரைக்கு இடந்தந்து உதவி செய்யாமையின், அத் தெய்வ முனிவரரைத் தமக்கு மேற்கோளாகக் கொள்ளுதல் ஆகாமை கண்ட இந் நாட்டுப் போலிச் சைவர் சிலரும் மாயாவாத வேதாந்திகள் பலருந் தமது போலிக்கொள்கைக்கு இசைந்த வடநாட்டு முனிவரர் தயாநந்த சரஸ்வதியை அடைக்கலம் புக்கது சாலப் பொருத்தமேயாம். புக்கும் என்! அவர் கைக்கொண்ட இருக்கு வேதமே அவரது கோட்பாட்டின் பொய்ம்மை காட்டி அவரைக் கைவிட்டதாயின், தயாநந்த சரஸ்வதி அவர்க் கெங்ஙனம் உதவி செய்யவல்லார்!

அற்றேல், அஃதாக, ஆரியமொழி நூல்களாகிய ‘இருக்கு’, ‘எசுர்’ முதலிவற்றில் தமிழ்ச் சான்றோர்தங் கோட்பாடுகள் புகுந்தவாறு என்னையெனிற் கூறுதும்: ஆரியர் நல்லுணவும் நல்லுறைவிடமும் பெறுதற்குத் தேடியலைந்து தமிழ் நிலமாகிய இப் பரத நாட்டிற்புகுந்த காலத்துப் பெரும்பாலும் போர் மேற்கொண்டே போந்தனர்; அப்போது தமிழர்கள் நாகரிகத்தின் மிக்காராய், ஆங்காங்கு நகரங்களும், அந் நகரங்களில் அரசியல்களும் அமைத்துப் பொருள்வலியும் படைவலியும் போர் வலியும் மிகப் படைத்தவர்களாய் வாழ்ந்து வந்தமையின், பசித்துவந்த வறியராகிய ஆரியர் பண்டைத் தமிழ்மக்களை எதிர்த்து வெல்லுதல் இயலாதாயிற்று. இயலாதாகவே பலவகையாலுந் தமிழர் தம் நட்பையும் உறவையும் தேவநாட்டிலிருந்து வந்த தேவர்களேயென்றும், தாம் பேசும்மொழி தேவமொழியே யென்றுந், தம்மைப் பகைத்தலுந் தமக்கு இடர் செய்தலும் அங்ஙனஞ் செய்வாரை மீளாநரகிற்கு ஆளாக்கு மென்றுந், தம்மை வணங்கித் தாம் ஏவிய செய்தொழுகுவார்க்கு இம்மையில் எல்லா நலங்களும் பெருகுவதன்றி மறுமையிலும் பிதிரர்களால் உவந்தேற்று உயர்ந்த இன்ப உலகங்களில் வைக்கப்படுவதுங் கைகூடு மென்றுஞ் சொல்லித் தமிழரிற் பெரும்பாலாரை ஆரியர் தம் வயப்படுத்திவிட்டார். அஞ்ஞான்றை ஆரியரிற் பெரும்பாலார்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_24.pdf/96&oldid=1590717" இலிருந்து மீள்விக்கப்பட்டது