உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 24.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86

  • மறைமலையம் - 24

அதன்பிற் பங்குனி

L

காளைமாடுகளைக் கொன்று பகலவனுக்குப் பலியூட்டி, நாளில் மணம் நடத்துமுறை பகரப்பட்டிருக்கின்றது; அம் மண்டிலத்து 86 ஆம் பதிகத்தின் 14 ஆவது செய்யுளில் ஆரியர் பதினைந்து எருமை மாடுகளைக் கான்று இந்திரனுக்குப் படைக்க, அவன் அவற்றின் காழுப்பை ஆரத்தின்று வயிறு நிறைந்தடைந்த மகிழ்ச்சி எடுத்துரைக்கப் பட்டிருக்கின்றது; அம் மண்டிலத்து 91 ஆம் பதிகத்தின் 14 ஆவது செய்யுளிற் குதிரைகளையும் எருது களையும் ஆக்களையும் வறட்டு ஆக்களையும் செம்மறி யாடுகளையும் கொன்று ஆரியர் வேள்வி வேட்டமை விளக்கமாக விளம்பப்பட்டிருக்கின்றது. இருக்கு வேதத்திற்குப் பின் எழுந்த ‘பிராமணங்கள்' 'ஸ்மிருதிகள்' என்பவற்றில் விரிவாகச் சொல்லப்பட்டிருக்கும் உயிர்க்கொலை வேள்விகள் தாம் ருக்குவேத காலத்திற்குப்பின் உண்டா யினவென்று கூறத்துணிபவர், இருக்குவேதத்திலேயே ஒருகாலன்றிப் பலகாலும் இங்ஙனம் விளக்கமாக நுவலப்பட்டிருக்குங் குடி காலை மலிந்த வெறியாட்டு வேள்விகள் நிகழவில்லை யென்றலும், அவை தமக்கு வேறுபொருள்கள் உளவென்றலும் ‘முழுப் பூசனிக்காயைச் சிறு சோற்றில் மறைப்பதற்கே ‘ ஒப்பாய் ஆராய்ச்சி யறிவுடையாரால் நகையாடி விடுக்கற்பாலனவாய் ஒழியும் என்க. இவை தமக்கெல்லாம் வேறு பொருள்கள் உளவென்பார் கூற்றுத், 'தவவொழுக்க மென்பது ஏதோர் உயிரையுங் கொன்று அதன் ஊனை உண்ணாமையேயாம்' என்று வற்புறுத்தி ஒளவைப் பிராட்டியார் மொழிந்த “நோன் பன்பது கொன்று தின்னாமை என்னும் அறிவுரைத் தொடரைத் தன் கருத்துக்கு இணங்குமாறு பொருள்படுத்த வேண்டினான் ஓர் ஊன்தின்னி தின்னாமை' என்னும் ருசொல்லைத் 'தின் ஆமை என இரண்டு சொல்லாகவுந், ‘தின் மை’ என மூன்று சொல்லாகவும் பிரித்து ‘ஆமை இறைச்சியைத் தின்னல்' எனவும், ‘மாடு ஆகிய என்பவற்றின் இறைச்சியைத் தின்னல்' எனவும் பொரு ளுரைத்து, 'ஆகவே 'தவவொழுக்க மென்பது ஆமை மாடு ஆடு என்பவற்றின் ஊனை யுணவாகக் கொள்ளுதலேயாம்' என்று அவ் வறிவுரைக்குப் பொருள் கூறி ஆரவாரம் புரிதலோடு ஒப்பதாமன்றிப் பிறிதென்னை? ஒரு நூலின் போக்கையும் அதனை இயற்றிய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_24.pdf/95&oldid=1590716" இலிருந்து மீள்விக்கப்பட்டது