உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 24.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

―

மாணிக்கவாசகர் வரலாறும் காலமும் 3

85

பெறாதவனாகலின் அவன் ஒருவனே எல்லா முதன்மையும் உடைய முழுமுதற் கடவுளாதலும் மேலே விளக்கப்பட்டது. இன்னும் இதன் விரிவை வேளாளர் நாகரிகம் என்னும் எமது நூலிற் கண்டுகொள்க.

ஊனை

ஆரியர் உயிர்களை ஏராளமாய்க் கொன்று தாம் வணங்கி வந்த சிறுதெய்வங்களுக்கு அவற்றின் இறைச்சியைப் படைத்துத் தாமும் அயின்றுவந்தமை இருக்குவேதத் திலேயே பற்பல இடங்களிலுந் தெளிவாகச் சொல்லப் பட்டிருக் கின்றது. அதன் முதன் மண்டிலத்து, 116 ஆம் பதிகத்தின் 7 ஆவது செய்யுளில் அசுவினி தேவர்கள் சுவானுக்கு நூறு சாடிச் சாராயங் கொடுத்தமையும், 16 ஆவது செய்யுளில் 'ரிஜிராசுவன்’ அசுவினி தேவர்களின் ஊர்தியான கழுதையின்பொருட்டு விதையடித்த நூறு செம்மறியாடுகளை ள வெட்டி அவற்றின் உணவாகப் படைத்தமையுஞ் சொல்லப்பட்டிருக்கின்றன; 162, 163 ஆம் பதிகங்களில் வெள்ளாட்டினையுங் குதிரையையுங் கொன்று அவற்றின் ஊனைச் சமைத்துப் 'பூஷன்' 'இந்திரன் என்னுந் தெய்வங்கட்குப் படைத்தமை விரிவாகக் கூறப்பட்டிருக் கின்றது; அதன் ஐந்தாம் மண்டிலத்து 29 ஆம் பதிகத்தின் 7 ஆவது செய்யுளில் முந்நூறு எருமை மாடுகளைக் கான்றுஅவற்றின் இறைச்சியை நெருப்பில் வாட்டிப் பதப்படுத்தி அதனை மூன்று பெரிய தொட்டிச் சோமச் சாராயத்துடன் இந்திரனுக்குப் பலியூட்டினமை வெளிப்படை யாக நுவலப்பட்டிருக்கின்றது; அதன் ஆறாம் மண்டிலத்து 17 ஆம் பதிகத்தின் 11 ஆவது செய்யுளிலும் அங்ஙனமே நூறு எருமை மாடுகளைக் கொன்று தீயிற் பதப்படுத்தி அவ்வூனை

மூன்று பெரிய தொட்டிக் கள்ளுடன் இந்திரனுக்குப் படைத்தமை தெளிவாக மொழியப்பட் டிருக்கின்றது; 4 ஆவது செய்யுளில் ஆரியர் தம்முள் இறந்துபோன ஒருவனைச் சுடுகாட்டின் விறகின்மேல் வைத்துக் கொளுத்தப் போகையில் ஓர் ஆட்டைக் கொன்று அதன் உறுப்புகள் ஒவ்வொன்றையும் பிணமாய்க் கிடப்பவன் உறுப்புகளின் மேல் வைத்து அவனைக் கொளுத் தினமை கூறப்பட்டிருக்கின்றது;அம் மண்டிலத்து 85ஆம் பதிகத்தின் 13 ஆவது செய்யுளில் ஒருவனுக்கும் ஒருத்திக்கும் மணம் நடத்துவதற்குமுன் மகமீன் நாளிற்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_24.pdf/94&oldid=1590715" இலிருந்து மீள்விக்கப்பட்டது