உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 24.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84

வேள்விகளில்

மறைமலையம் 24

உயிர்க்கொலை நிகழவில்லையென்றும், உயிர்க்கொலை செய்கவென ஏவுஞ் சொற்றொடர்கட் கல்லாம் வேறு பொருள்கள் உளவென்றுந் தத்தமக்குத் தோன்றியவாறெல்லாம் பேசி, இலக்கண இலக்கிய அளவை நூல் வரம்புகளைக் கடந்துந், தொன்றுதொட்டு வரும் ஆரியர் தம் ஒழுகலாற்றுக்கும் வேதங்கள் பிராமணங்கள் தரும சூத்திரங்கள் முதலான ஆரிய நூல்களில் மிக விரிவாகவும் விளக்கமாகவுஞ் சொல்லப்பட்டிருக்கும் உயிர்க்கொலை வேள்வி முறை கட்கும் முற்றும் மாறானதொரு கோட்பாட்டினைக் கிளப்பியும் பெரியதோர் ஆரவாரம் புரிவாராயினர்.

உடை

இந்திரன் முதலிய பெயர்கள் முழுமுதற் கடவுளையே குறிப்பது உண்மையாயின், அப்பெயர்களால் உணர்த்தப்படும் அத் தெய்வங்கள் முழுமுதற் கடவுட்குரிய இலக்கணங்கள் யவாய் இருத்தல் வேண்டுமன்றோ? இந்திரன் சோமன் என்பார் பிரஜாபதியாற் படைக்கப்பட்டவர் எனச் ‘சதபதபிராமணங்’ (11, 1, 6) கூறுதலானும்,மித்திரன், வருணன், தாத்ரி, அர்யமான், அம்சன், பகன், விவஸ்வதன், ஆதித்யன் என்னும் எண்மரும் அதிதியின் புதல்வரென அஃது அங்ஙனமே எடுத்துச் சொல்லுதலானும், கட்குடியும் விலங்குகளின் கொலையால் வரும் ஊன்உணவும் அவ் இந்திரன் முதலியோர் கைக்கொண்டமையுந் தந்தையைக் கொல்லல் மகளைப் புணர்தல் முதலான மிக இழிந்த செயல்களை அவர் புரிந்தமையும் மேலே 372 ஆம் பக்கம் முதல் 380 ஆம் பக்கம் வரையில் எம்மால் எடுத்துக் காட்டப்பட்டிருத்தலானும், த்தேவர்கள் பகைவராற் பலகாலுந் தோல்வியுற்று வருந்தி வந்தமையின் தாம் சாவாதிருத்தற்கு மருந்து வேண்டி முயன்ற காலத்தில் அவரைக் கொல்லும் நஞ்சு ஒன்று எழ அதனைச் சிவபிரான் உட்கொண்டு அத் தேவர்களைக் காத்தமை “கேஸி விஷஸ்ய பாத்ரேண யத் ருத்ரேணா பிபத் சஹா” (10, 136, 7) என இருக்கு வேதத்தின் கண் நன்கெடுத்துக் கூறப்பட்டிருத் தலானும் அத் தேவரெல்லாரும் மக்களோடொத்த சிற்றுயிர் களேயாவ ரல்லது முழுமுதற் கடவுளராதல் கடவுளராதல் செல்லாது. மற்றுச், சிவபிரானோ உயிர்கட்குள்ள இக் குற்றங்கள் சிறிதும் அணுகப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_24.pdf/93&oldid=1590714" இலிருந்து மீள்விக்கப்பட்டது