உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 24.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* மாணிக்கவாசகர் வரலாறும் காலமும் -3 கொள்ளேன் புரந்தரன் மாலயன் வாழ்வு குடிகெடினும் நள்ளேன் நினதடியாரொ டல்லால் நரகம் புகினும் எள்ளேன் றிருவருளாலே இருக்கப்பெறின் இறைவா உள்ளேன் பிறதெய்வம் உன்னையல்லா தெங்கள் உத்தமனே

என்றும்,

புற்றில்வா ளரவும் அஞ்சேன்

பொய்யர்தம் மெய்யும் அஞ்சேன்

கண்ணுதல் பாதம் நண்ணி

கற்றைவார் சடைஎம்அண்ணல்

மற்றும்ஓர் தெய்வந் தன்னை

உண்டென நினைந்துஎம் பெம்மாற்

கற்றிலா தவரைக் கண்டால்

அம்மநாம் அஞ்சு மாறே

83

(திருச்சதகம், 2)

(அச்சப்பத்து, 1)

என்றுந் திருவாசகத்தில் அருளிச்செய்திருத்தல் காண்க.

இவ்வாறு பிறப்பு இறப்பு இல்லாச் சிவபெருமானே முழுமுதற் கடவுளாதல் தெரித்து, ஏனைச் சிறுதெய்வங் களெல்லாம் பிறப்பு இறப்புகளுட் கிடந்து அவன் ஆணை வழி யுழலுஞ் சிற்றுயிர்களாதலுங் காட்டிச் சைவ சமயாசிரியர் களெல்லாரும் ஒரே முகமாய் அச் சிறுதெய்வ வணக்கத்தை மறுத்து விலக்கிய செந்தமிழ் அருளுரைகள் வெள்ளிடை மலைபோல் விளங்கிக் கிடப்பவும், இஞ்ஞான்று தம்மைச் சைவரெனவுங் கூறிக் கொள்வார் சிலர், ஆரியரது,சூழ்ச்சியில் வீழ்ந்து ஆரிய வேதங்கள் சிவபிரான் அருளிச் செய்தனவேயா மென்னும் ஒரு பொருந்தாக் கொள்கை யினை நாட்டுதற்குப் புகுந்து, இறைவன்றன் திருவுருவ வழிபாட்டினை இகழ்ந்து மறுத்துத் தம் வாழ்நாள் எல்லையளவுஞ் சைவசமயத்துக்கு மாறாய் நின்ற 'தயாநந்த சரஸ்வதி' என்னும் வடநாட்டு முனிவரரின் கொள்கையைத் தழீஇ இருக்குவேதத்திற் சொல்லப்பட்ட இந்திரன் மித்திரன் வருணன் முதலான பல தெய்வப் பெயர்களெல்லாம் ஒரு தெய்வத்தின் மேலனவே யாமென்றும், ஆரிய வேதங்களின் படி வேட்கப்பட்ட

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_24.pdf/92&oldid=1590713" இலிருந்து மீள்விக்கப்பட்டது