உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 24.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82

  • மறைமலையம் - 24

தெரித்தற் பொருட்டே சைவசமயாசிரியரான திருநாவுக்கரசு நாயனார்,

எரிபெ ருக்குவர் அவ்வெரி ஈசனது

உருவ ருக்கம தாவது உணர்கிலார், அரிஅ யற்குஅரி யானை அயர்த்துப்போய் நரிவிருத்தம தாகுவர் நாடரே

எனவும்,

அருக்கன் பாதம் வணங்குவர் அந்தியில் அருக்கன் ஆவான் அரன்உரு அல்லனோ? இருக்கு நான்மறை ஈசனை யேதொழுங் கருத்தி னைநினை யார்கன் மனவரே

எனவும்

அருளிச்செய்திட்டார்.

(பொது)

(பொது)

தீயும் ஞாயிறுஞ்

சிவபெருமான்றன் றிருவுருவங்களாதலை உணரப்பெறாத ஆரியப் பார்ப்பனரை "நரிவிருத்தம தாகுவர்” “கன்மனவர்” என்று ஆசிரியர் இரங்கி இகழ்ந்துரைத்தமை நினைவிற் பதிக்கற்பாற்று. அவ்வாரியர் முழுமுதற் கடவுளாகிய சிவபெருமானை வணங்குதல் விட்டு, அரிபிரமன் இந்திரன் என்னுஞ் செத்துப் பிறக்குஞ் சிறுதெய்வங்களை வழிபடுதல் கண்டன்றோ இரங்கி மனங்கொதித்துப் பின்னும் அப்பெருந்தவ ஆசிரியர்,

செத்துச் செத்துப் பிறப்பதே தேவென்று பத்தி செய்மனப் பாறைகட்கு ஏறுமோ? அத்தன் என்று அரியோடு பிரமனுந் துத்தி யஞ்செய நின்றநற் சோதியே

எனவும்,

நூறுகோடி பிரமர்கள் நொந்தினார்

(பொது)

ஆறு கோடி நாராயணர் அங்ஙனே

ஏறு கங்கை மணல்எண்ணில் இந்திரர்

ஈறு இலாதவன் ஈசன் ஒருவனே

(பொது)

எனவும் நிரம்பக் கடுத்த சொல்லில் எடுத்து இடித்தறிவுறுத்

தருளினார். இவரைப் போலவே சைவசமய முதலாசிரியரான மாணிக்கவாசகப் பெருமானும்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_24.pdf/91&oldid=1590712" இலிருந்து மீள்விக்கப்பட்டது