உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 24.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* மாணிக்கவாசகர் வரலாறும் காலமும் - 3

81

தாமும்வேள்வி வேட்கத்தெரிந்து கொண்டபின் அத்தமிழ்க் குருமாரை விலக்கித் தமக்குக் குரவர்களான வசிட்டர் முதலாயினரைக் காண்டு அவ்வாரியர்கள் வேள்வி வேட்கலானமையும் இங்ஙனஞ் செய்துபோந்த ஆரியரது படிற் றொழுக்கத்தால் இருதிறத்துக் குருமார்களுக்குட் பகைமையும் அதுவாயிலாக அவ் விருதிறத்தாரின் அரசர்க்குட்போரும் அடுத்தடுத்து நிகழலானமையும் இருக்குவேதப் பாட்டுக்களைக் கருத்தூன்றி யாராய்வார்க்கு இனிது புலனாகாநிற்கும். தமிழர் வேட்கும் முத்தீ வேள்வியைப்போல், ஆரியரும் வேட்கத் தாடங்கி வேள்விச் சடங்குகளை அளவிறப்பப் பெருக்கிப் 'பிராமணங்கள்’ வரைந்து, தமிழரசர்களை ஏமாற்றி அவர்பாற் பெற்ற பெரும் பொருட்டிரள் கொண்டு, தாம் ஊனுண்டு கட்குடிக்கும் ஒழுகலாறு உடையராகலின், அதற்கேற்பக் கொலையுங் குடியும் மலிந்த வேள்விகளைப் பல்லாயிரக் கணக்காக வேட்டுவந்தனரேனும், அவர்கள் அவ்வேள்விகளிற் சிவபெருமானை வணங்கினவர் அல்லர்.

தமிழ்ச் சான்றோர்கள் வேட்டுவந்த வேள்விகள் அத்துணையுங் கொலையுங் குடியும் இல்லாதனவாய்ச் சிவபிரான் ஒருவனை மட்டுமே வணங்குதற் பொருட்டு வேட்கப்பட்டன; ஆரியர் வேட்ட வேள்விகளோ பல்லாயிரக் கணக்கான உயிர்களைக் கொன்றுந் தொட்டி தொட்டியாகச் சோமப்பூண்டில் இறக்கிய கள்ளை யுண்டும் இந்திரன் வருணன் முதலான சிறு தேவதைகளை வணங்குதற் பொருட்டாகவே

வேட்கப்பட்டன.

6

தமிழர் தீயினையும் ஞாயிறு திங்களினையும் வழிபடுங் கால் அவை முழுமுதற் கடவுளோடொப்ப ஒளிவடிவினவாய் விளங்கும் நுட்பம் உணர்ந்து, அவற்றை இறைவற்கு உடம்பாகவும் இறைவனை அவற்றிற்கு ஓர் உயிராக

வுங்கொண்டு அவ் வொளிவடிவுகளைச் சிறந்தெடுத்துப் பாராட்டி வழிபட்டனர்; ஆரியரோ, தாம் படைக்கும் ஊனையுங் கள்ளையும் ஏற்று அவற்றை இந்திரன் முதலான சிறுதெய்வங்கட்குச் சேர்ப்பிக்கும் ஓர் ஏவலனாக இழிந்த நிலைமைக்கண் வைத்துத் தீக்கடவுளை வணங்கலாயினர். இவ்வாறு தமிழர் வேட்ட வேள்விகட்கும் ஆரியர் வேட்ட வேள்விகட்கும் உள்ள பெரியதொரு வேறுபாட்டினைத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_24.pdf/90&oldid=1590711" இலிருந்து மீள்விக்கப்பட்டது