உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 24.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80

.

மறைமலையம் 24

திருநீற்றை அவ் ஆரியர் தாமும் அணியாவாறுந் தடை செய்வவாயின. இங்ஙனமாகப் பண்டு தொட்டு ஆரியர் தமிழரையுந் தமிழ்த்தெய்வமாகிய சிவபிரானையும் பகைத்து இகழ்ந்து வருதல் பற்றியே, அவ்வாரிய இனத்திற் றம்மைச் சேர்த்துக்கொண்டு வடமொழியையும் வடநூல்களையுமே தமக்குரியன வென்று தழீஇத், தம்மைப் பார்ப்பனரென்று சொல்லிக்கொள்ளும் இஞ்ஞான்றை மக்களெல்லாரும், சிவபிரானைச் சூத்திரதெய்வ மென்றுந் தேவார திருவாசகத் தமிழ்மறைகளைச் சூத்திரப்பாட் டென்றும் இழித்துரைத்துத் திருமாலின் அவதாரங்களாகத் தாம் பிழைபடக்கொண்ட இராமன் கண்ணன் என்பாரை மட்டும் வணங்கி வ நூல்களையே ஒரு வரை துறையின்றிப் பாராட்டி வருகின்றனர். வ்வாறு தொன்றுதொட்டு தொன்றுதொட்டு இன்றுகாறும் நடைபெற்றுவரும் ஆரியர் ஒழுகலாற்றினை நடுநின்று நன்காய்ந்து காணும் நுண்ணறிவாளர் எவர்க்கும், இருக்கு வேதத்திற் ‘பரதர்’ முதலிய பெயர்களால் வழங்கப்பட்ட பண்டைத் தமிழ் நன்மக்களே ஞாயிறு திங்கள் தீ என்னும் முத்தீவடிவில் வைத்து முழுமுதற் கடவுளான சிவபிரானை வழிபடும் நுட்பமுறையைக் கண்டோராவர் ாராவர் என்னும் அரும்பேருண்மை

6

விளங்கா நிற்கும்.

L

தற்றென

பரதகண்டமாகிய இத் தமிழ்நாட்டுட் புகுந்து பல்வகைச் சூழ்ச்சிகளால் தமிழரது உறவைப்பெற்று ஆங்காங்குக் குடியேறி நிலைபெற்ற ஆரியர், தமக்கு முன்னே நாகரிகத்தில் மிகச் சிறந்தாராய்த் திகழ்ந்த தமிழ்மக்கள் செய்துபோதரும் முத்தீ வேள்வியினைக் கண்டு, அதைப் போற் றாமும் வேள்வி வேட்கத் தலைப்பட்டனர். இருக்குவேத காலத்தில் தமிழ்ச் சான்றோர்களே முத்தீ வேள்விகள் வேட்டனரன்றி, ஆரியக்குருமார் அவற்றை வேட்டனரல்ல ரென்பதூஉம், எஜுர்வேத சாமவேத காலங் களிலே தாம்அவர்கள் தமிழாசிரியரது துணைகொண்டு அவற்றை வேட்கலாயின ரென்பதூஉம் ஐரோப்பிய ஆசிரியரான மாக்ஸ்மூலர் விளக்கியவாற்றானும் நன்குணரப் படும்.25 ஆரியர் தாம் வேள்விவேட்கத் தெரியாத காலங்களி னல்லாம் ‘விசுவாமித்திரர்’, ‘ஜமதக்கினிகள்' முதலான தமிழ்க் குருமார்களைத் தம்பால் வருவித்துத் தமக்குரிய இந்திர தய்வத்திற்கு வேள்வி வேட்டமையும், அவ்வாற்றால்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_24.pdf/89&oldid=1590710" இலிருந்து மீள்விக்கப்பட்டது