உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 24.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* மாணிக்கவாசகர் வரலாறும் காலமும்

79

மட்டின் அமையாது வசிட்டக் குடியினர் விசுவாமித்திரக் குடியினர் வணங்கிய முழுமுதற் றெய்வமாகிய சிவபெருமானை யும் கூடச் ‘சூத்திர தெய்வம்,' 'சிசிதேவதை' எனப் பெரிதும் இகழ்ந்து பேசலாயினர். இங்ஙனம் வசிட்டரைக் குருவாய்க் கொண்ட ஆரியர், விசுவாமித்திரரைக் குருவாய்க்கொண்ட தமிழ ரிடத்தும், அவர் வணங்கிய தமிழ்த் தெய்வமாகிய ஞாயிறு திங்கள் தீ என்னும் ஒளிப்பிழம்பு களிடத்தும் அப்பிழம்பு களினுட் கட்புலனாய் விளங்கித் தோன்றும் உருத்திரரிடத்தும் வரைகடந்த பகைமை காண்ட மை யாலன்றோ, பிற்காலத்தில் அவ்வாரிய வசிட்ட மரபினரின் வழித்தோன்றிய பார்ப்பனர் ஆக்கிய ‘வசிட்ட ஸ்மிருதி”முதல் அத்தியாயத்தில் “சதுர்வேதீ ச யோவிப்ரோ வாசு தேவம் நவிந்ததி” என்று தொடங்குஞ் செய்யுண் முதல் ஐந்து செய்யுட்கள், "நான்கு வேதங்களிலும் வல்லவனா யிருப்பினும், வாசுதேவனை யறியாத ஒரு பார்ப்பனன், வேதமாகிய ஒரு பெருஞ் சுமையைத்தாங்கி நடுங்கிக் கொண்டிருக்கும் ஒரு பார்ப்பனக் கழுதையேயாவான். ஆதலால் வைஷ்ணவனா யிருந்தாலன்றி ஒருவன் பார்ப்பனத்தன்மையை இழந்து விடுவன். வைஷ்ணவனாயிருப்பதால் ஒருவனுக்கு முழுமுதற்றன்மை உண்டாகின்ற தென்பதிற் சிறிதும் ஐயம் இல்லை. ஏனென்றால் நாராயணனே பரப்பிரமம்; அவனே பார்ப்பனர்களுக்குத் தெய்வமாவன்; திங்களும் ஞாயிறும் மற்றையவும் க்ஷத்திரியர்க்கும் வைசியர்க்குந் தெய்வங்களாகும்; உருத்திரனும் அவனையொத்த தெய்வங்களுஞ் சூத்திரர்களாலேயே இடைவிடாது வணங்கற்பாலன. புராணங்களினும் ஸ்மிருதி களினும் உருத்திர வணக்கஞ் செய்கவெனக் கட்டளையிடும் இடங்கள் பார்ப்பனரைக் குறிப்பன அல்ல; இவ்வாறு பிரஜாபதி வற்புறுத்திக் கூறினார். புராணங்களில் விதந்து சொல்லப்படும் உருத்திர வழிபாடும் மூன்று கீற்றாகத் திருநீறு இடுதலும், க்ஷத்திரியர் வைசியர் சூத்திரர் என்னும் இனத்தாரை நோக்கிச் சொல்லப்பட்டனவே யல்லாமல், மற்றை யோரை நோக்கின அல்ல. ஆகையாற், சிறந்த முனிவர்களே,பார்ப்பனர்கள் திரிபுண்டாம் அணிதல் ஆகாது ”24 என்று வற்புறுத்தி, ஆரியப் பார்ப்பனர் தமிழ்த்தெய்வமாகிய உருத்திரரை வணங்காவாறும், தீயினை வழிபட்டு அதன் தூய அடையாளமாகத் தமிழர் இடுந்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_24.pdf/88&oldid=1590709" இலிருந்து மீள்விக்கப்பட்டது