உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 24.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78

மறைமலையம் - 24

வகுப்பினரான துக்ரரே யாவரெனக் கருதப்படுகின்றனர்; இவர்களையே ‘நாகரின் மக்கள்' எனக் குறிப்பிட்டு ஆரியர் இகழ்ந்துரைத்தனர்; இவர்களே சைவர் எனப் பெயர் பூண்டு, நாகத்தின் வடிவின்கீழ் அல்லதொரு நாகத்தின் தன்மையில் வைத்துச்

சிவபாழிப்பாட்டினை உண்டாக்கினோராதல் வேண்டும்”23 எனவும் அவர் மொழிந்தமை காண்க.

6

உண்மை யாராய்ச்சியில் வல்ல இவ்வைரோப்பிய ஆசிரியர் இருக்குவேதப் பதிகங்களை நடுநின்று நுண்ணிதின் ஆராய்ந் துரைத்த இவ்வுரைகளால், வசிட்டரும் அவரைக் குருவாய்க் கொண்ட ஆரியரும், விசுவாமித்திரர்க்கும் அவரைக் குருவாய்க் கொண்ட பரதர் முதலான தமிழ்க் குடியினர்க்கும் அத் தமிழ்க்குடியினர் தீ வடிவில் வைத்து வழிபடுஞ் சிவவழிபாட்டுக்கும் முற்றும் மாறாய் நின்றமை நன்கு புலனாகின்றதன்றோ? தீத்திரளையான ஞாயிற்றினையும், அஞ் ஞாயிற்றினை ஓர் உடம்பாய்க் கொண்டு ‘பர்க்கன்' எனப் பெயர் பூண்டு விளங்குஞ் சிவபெருமானையும் வழுத்துங் காயத்திரி மந்திரமானது, விசுவாமித்திரரையும் அவர்தங் குடியினரையும் ஆசிரியராய்க் கொண்ட இருக்குவேத மூன்றாம் மண்டிலத்தின் றுதிக் கண்ணதான 62 ஆம் பதிகத்தின் 10-வது செய்யுளாய் அமைந்திருத்தலையும் இம் ம் மூன்றாம் மண்டிலத் தொடக்கத்திலுள்ள பதிகங்களும் அதன் இடையிடையேயுள்ள பதிகங்களுந் தீக்கடவுண் மேலன வாயிருத்தலையும், தீக்கடவுண் மேலனவாய் இம் மூன்றாம் மண்டிலத்தினும் ஏனை மண்டிலங்களினும் பாடப்பட்டுக் கிடக்கும் பதிகங்கள் பெரும்பாலனவற்றின் மட்டுமே 'பரதர் என்னுந் தமிழ்க்குடியினர் பயர் எடுத்துக் கூறப்படுதலையும், இருக்குவேதத்தில் தீக்கடவுண்மேலும் உருத்திரர் மேலும் பாடப்பட்டிருக்கும் பதிகங்களின் ஆசிரியர் பெரும்பாலும் விசுவாமித்திரக் குடியினைச் சேர்ந்த முனிவரராயிருத்தலையும் உற்றுநோக்க வல்லார்க்குத், தீக்கடவுளையுஞ் சிவபிரானையும் பாடிய அம் முனிவரெல்லாம் பண்டைத்தமிழ் வகுப்பினரே யாதல் தெற்றென விளங்காநிற்கும். இதனாலன்றோ வசிட்ட மரபினரும் விசுவாமித்திர மரபினரும் ஒருவரையொருவர் மிகப் பகைத்து வைதுரைக்கும் பாட்டுகள் இருக்கு வேதத்தின்கட் காணப்படுவவாயின. இவர் தம்மிற்றாம் இகலி நின்றதொன்றின்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_24.pdf/87&oldid=1590708" இலிருந்து மீள்விக்கப்பட்டது