உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 24.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

―

மாணிக்கவாசகர் வரலாறும் காலமும் 3×

77

.

இருதிறத்தாரையுஞ் சேர்ந்த பாவலர் அச்சண்டையைப் பற்றியும், பருஷிநீ யாற்றங் கரையில் முடிவாக நடந்த போரைப் பற்றியுந் தாம் பாடிய கிளர்ச்சியான பதிகங்களில் (இருக்குவேதப் பதிகத் திரட்டில் இப்பதிகங்கள் உண்மை நிகழ்ச்சிகளை அறிவிப்பன என்பதிற் சிறிதும் ஐயறவுக்கு இடமில்லை) விளக்கமாகச் சொல்லியிருக்கின்றார்கள். பிற்பட்ட காலத்தில் வசிட்டரைச் சார்ந்தோரும் அவர் வழியில் வந்தோரும், உயிரற்ற விதிகள் பொருளற்ற சடங்குகள் ஆசாரங்கள் என்பவற்றை ஓர் எள்ளளவுகூட ஓர் எள்ளளவுகூட விடாமல் உன்னித்துச் செய்யுள் புல்லிய தன்மையிலும், ஆரியரது முறையிற் சேராத எதனையுங் கண்டு மனந் தாங்காமையிலும், மற்றை வகுப்பாரொடு கூடாமற் பிரிந்து நிற்குங் கொடுமையிலும் முதிர்ந்து குறுகிய நோக்க முடையராய் வருஞ் சரியான பார்ப்பன இனத்தின்றன்மை யினைக் காட்டுவோ ராவரென்பது அறியற்பாற்று. இம் மரபினரே நமது காலம் வரையிற் சாதி வேற்றுமையினை நெடுகக் காத்துவந்தவராவர்; அவ்வேற்றுமையினை முதன் முதல் உண்டாக்கினவரும் அவரே யாதல் கூடும். பார்ப்பனக் குருமார்கள் தெய்வத்தன்மை வாய்ந்தவர்கள். அவர்களே உலகினை ஆளுதற்கு உரியர். அவர்களே உலகிலுள்ள ள எல்லாப் பொருள்களுக்கும் உரிமையாளர், அவர்களே உலகின்கண் நடைபெறும் இயற்கை நிகழ்ச்சிகளை யெல்லாந் தாம் வேண்டுமாறு நடப்பிக்கவல்ல கடவுட் L டன்மை தவவொழுக்கங்களாலும் வைபோல்வன பிறவாலும் அவர்களே கடவுளரையும் ஏவல்கொளவல்லவர், எனப் பார்ப்பன ருரிமைகளை அளவுக் கடங்காமற் பாரித்துப் பேசி, அவற்றை விடாப்பிடியாய்க் கொண்டு முன்னேற்றி வைத்தவர்கள் இவ்வசிட்ட மரபினரே யாவர். மற்று, விசுவாமித்திரரைச் சார்ந்தாரும் அவர் வழிவந்தாருமோ, விரிந்த நோக்கமும் மேன்மேற் பெருகும் ஆக்கமும் எல்லாரோடும் உறவுபாராட்டும் இயற்கையும் எல்லாரோடும் அளவளாவும் வாழ்க்கையும் 6 வாய்ந்த குடிமக்களின் றன்மையினைக் காட்டுவோராவரென்பதூஉம் அறியற்பாற்று” எனவும், “சிவர் என்பாருடன் சேர்த்துச் சொல்லப்பட்ட விஷாநியர் என்பார், மிகப் பழைய தமிழ்மக்களுள் ஒரு

யுடையர், வேள்வியாற்றுதலாலுந்

இன்னும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_24.pdf/86&oldid=1590707" இலிருந்து மீள்விக்கப்பட்டது