உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 24.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76

மறைமலையம் - 24

பின்னர் எதனாலோ -ஒருகால் பழிக்குப் பழிவாங்கும் எண்ணத் தினாலோ, அவர் அவர்களை விட்டுச்சென்றனர்; ஆரியர் முன்னேறி வருகையினையும் அவர்க்கு வரவர மிகும் வலிவினையுந் தடை செய்யத், தம்மினத்தவர் தம்மிற் கூடிச்செய்த கட்டுப்பாட்டில் அவர் முதல்வராய் நின்றனர். இருக்கு வேத மூன்றாம் மண்டிலத்தில் (தீக்கடவுண்மேலும் னை ஆரியச் சிறு தெய்வங்கண் மேலும்) விசுவாமித்திரக் குடியினர் இயற்றிய பதிகங்களுள் 53 ஆம் பதிகமானது மேற்காட்டிய நிகழ்ச்சியினையே தமிழர் ஆரியரொடு போராடி அவரைத் தடுத்து நின்ற செய்தியினையே) குறிப்பிடுகின்றது. சுதாஸ் என்னும் அரசனின் வேள்விகளை விசுவாமித்திரர் நடத்தியபோது இந்திரன் அம் முனிவர் பொருட்டு அவனுக்கு அருள்புரிந்து அவன் எடுத்துச் செல்லும் படையெடுப்பினையும் அவன்றன் போர்க் குதிரையினையும் அவனையும் வாழ்த்தி வரங் கொடுத்தனனென அப் பதிகத்தின் முதற் பகுதியானது மொழியா நிற்கின்றது. அதன்பிற் சடுதியிலே விசுவாமித்திரர் தம் வேண்டுகோளுரைகள் பரத வகுப்பினரைக் காக்கவெனக் கட்டுரைத்தார் எனக் கழறுகின்றது; அப்பதிகத்தின் ஈற்றில் நிற்கும் நான்கு செய்யுட்கள் பகைவரைக் கெடுகவென வைதுரைக்கின்றன; இங்ஙனம் வைதுரைக்கப்பட்ட பகைவர் இன்னா ரென்பது அவற்றின்கட் சொல்லப்படவில்லை யாயினும், அப் பகைவர் வசிட்டரும் அவர் தங் குடியினருமே யாவரெனவும், அதனால் அவ்வசிட்டக் குடியினைச் சேர்ந்த பிற்காலத்துக் குருக்கண்மார்களுங்கூட அந்நான்கு செய்யுட் களையுந் தம்வாயால் ஒருபோதுஞ் சொல்லாமையோடு, மற்றைப் பார்ப்பன வகுப்பினர் அவற்றை ஓதுங்கால் அவை தம்மைச் செவி கொடுத்துக் கேளாதிருக்கவும் முயன்றன ரெனவுந் தொன்றுதொட்டுவரும் வரலாறு நுவல்கின்றது. வசிட்டக் குடியினர்க்குத் தனிச்சிறப்புக் கொடுக்கப்பட்ட கண்டு (இது திரித்சுக்கள் என்னும் அரச குடும்பத்தார்க்கு அவர்கள் புரோகிதராக ஏற்படுத்தப்பட்டமையா யிருக்கலாம்), விசுவாமித்திரர் செற்றங்கொண்டு, அத் திரித்சுக்களுக்குப் பெரும்பகைவரும் வலியருமான பூருக்களும் பரதர்களும் என்பார்பாற் போய்ச்சேர்ந்தனர். திரித்சுக்களும் அவர்களோ டுடன்சேர்ந்தவர்களும் பின் நிகழ்ந்த ‘அரசர் பதின்மரின் போர்" எனப்படுஞ் சண்டையில் வெற்றிபெற்றனர்.

மை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_24.pdf/85&oldid=1590706" இலிருந்து மீள்விக்கப்பட்டது