உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 24.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* மாணிக்கவாசகர் வரலாறும் காலமும் - 3

75

வகுப்பாரின் அரசனான பிரமகந்தனின் பெருஞ் செல்வ மெல்லாம் அவ் வாரிய அரசன் சுதாஸ் என்பவனுக்கு வந்து சேருமாறு வேண்டவே, அங்ஙனம் இரண்டகஞ் செய்த அவ் விசுவாமித்திரரின் நாவானது சிவபிரான்றன் சீற்றத்தால் மந்திரஞ் சொல்லும் வன்மை யிழந்து இயங்காது அவரை ஊமை ஆக்க, அவரும் அப்போது செயலற் றிருந்தனர். அது கண்டு உருத்திரரைத் தீ வடிவிற் கண்டு வணங்குவோரும், விசுவாமித்திரர்க்கு உறவினருமான ஜமதக்கினிகள், (இருக்கு, 10, 16,7, 4) என்னுந் தமிழ்க்குருமார் அவரது செயலறவினைக் கண்டு இரங்கி, ஞாயிற்றின்கட் புலனாய்த் தோன்றுஞ் சிவபிரான் பக்கல் அமர்ந்த சசர்பரீ என்னும் உமைப்பிராட்டியை வேண்டி வழுத்த அவளது அருட்கடைக்கண் நோக்கால்,

6.

விசுவாமித்திரர்க்குப் பெயர்த்தும் நாவன்மை உண்டாகவே, அவர் தாம் தமிழ்வகுப்பினர்க்கும் அவ் வகுப்பினர்க்குத் தலைவரான பரதர்க்கும் நன்மை விளையுமாறு வேண்டி, ஆ ரிய அரசன் சுதாஸ் என்பவனது வேள்விக்களத்தைவிட்டு

அகலாநிற்ப, அது கண்டு அவ் வாரிய அரசனின் குலகுருவான வசிட்டர் அவரையுந் தமிழரையும் பகைத்து இகழ்ந்துரைப்ப, அதனால் விசுவாமித்திரரும் பெருஞ்சீற்றங்கொண்டு அவ் வசிட்டரையும் ஆரியரையும் வைதுரைத்துத், தாம் தம் தமிழ்மரபினரோடுஞ் சென்றமையும் இருக்குவேத மூன்றாம் மண்டிலத்து 53 ஆம் பதிகத்தில் நன்கெடுத்து ஓதப்பட்டமை காண்க.இப் பதிகப் பொருளை ஆழ்ந்தாராய்ந்த ராகொசின் என்னும் ஐரோப்பிய ஆசிரியர் தமது வேத இந்தியா என்னும் நூலில் அதுபற்றி எழுதிய நடுநிலைவழா உரை தமிழ் நன்மக்களாவார் கருத்திற் பதிக்கற்பால தொன்றாகலின் அதனை இங்கே மொழிபெயர்த் தெழுதுவாம்:

22"இருக்கு வேதத்தினாலேயே அறியக் கிடக்குஞ் செய்தியினளவில் தனிநின்று நோக்குங்கால், வசிட்டர் என்பார் தனி ஆரியத் தலைவரான திரித்சுக்களுக்குக் குரவராதலும், விசுவாமித்திரர் என்பார் அவ் வாரியர்க்குப் பெரும்பகைவரும் உள்நாட்டுக் குடிமக்களுள் ஆண்மையில் மிகச் சிறந்தாரும் ஆன பரதர்க்குக் குரவராதலும் பெறப்படா நிற்கும். விசுவாமித்திரர் ஒரு காலத்தில் திரித்சுக்களிடம் போய்ச் சேர்ந்திருந்தனர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_24.pdf/84&oldid=1590705" இலிருந்து மீள்விக்கப்பட்டது