உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 24.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74

  • மறைமலையம் - 24

"20

தாகையில் மிகக் குறைந்த ஒருகூட்டத்தார் எதிர்த்துச் செல்வதென்றால் அஃது எத்துணை இடர்ப்பாடுடையதாய் இருக்கவேண்டு மென்பது நாம் எளிதில் உணரக்கூடிய தொன்றேயாம். தமிழர்கள் இப்போதும் அத்தன்மை யராகவே இருக்கின்றனர்; விந்தியமலைக்குத் தெற்கே இருநூற்றெண்பது இலட்சம் பேர்க்குமேல் உளர்; அவர்கள் தமது தேயத்தின்மேல் வைத்த அன்பினால் ஆரியரை எதிர்த்து நின்ற அம் மிகப் பழைய காலத்திலும் அவர்கள் அங்ஙனமே பருந் தொகையினராய் இருந்தன ரென்பதை ஐயுறுதற்கு ஏதோர் இயைபும் இல்லை எனவும், “இந்திய நாட்டுக்குள் குடியேறிய ஆரியர் தமக்கு முற்பட்டே அந் நாட்டுக்கு உரியராகத் தாம் கண்ட னத்தாரின் மரபினரோடும் அவ் வினத்தார்க்கு ஈடானாரோடும் அவ் வாரியரை ஒப்பிட்டுங் காணுமளவில் அவ் வாரியரது தொகை அவர்க்குச் சிறிதும் ஒவ்வாது மிகச் சிறிதாயிருத்தல் பலர்க்கும் வியப்பினைத் தோற்றுவியாநிற்கும். இவ் விருதிறத்தாரின் தொகையில் ஏற்றத்தாழ்வுகள் அம் மிகப் பழையகாலத்தே இன்னும் மிகுதியாய் இருந்ததாகல் வேண்டும்; ஆகவே, வெறுவல்லாண்மையினாலும் வெற்றி யினாலுமே ஆரியரது தலைமைப்பாடு இந் நாட்டின் கண் நிலைபெறலாயிற் றன்னுங் கொள்கை பெரிதும் பொருத்த மற்றதென உறுதிப்படுத்துதற்கு ஈதொன்றுமே போதும்

9921

ங்ஙனமெல்லாம் பண்டை க்கால ஆரியர்க்குந் தமிழர்க்கும் இடைநிகழ்ந்த பெரும்போராட்டமும், தமிழரின் பேராண்மையினையும் பெருநாகரிகத்தினையும் நன்குணர்ந்த ஆரியர் அவரோடு எதிர்த்துநின்று அவரை வெல்லுதல் இயலாமை கண்ட வளவானே அவர் தம்மில் வலியரா யினாரைப் பல்வகைச் சூழ்ச்சிகளால் தமக்குத் துணையாய்க் கொண்டு அவ்வழியால் இப் பரதநாட்டுள் மெல்ல மெல்லப் புகுந்து ஆங்காங்குக் குடியேறலானமையும் இருக்குவேதப் பாட்டுக்களைக் கருத்தூன்றி ஆராய்வார்க் கெல்லாந் தெற்றெனப் புலனாகா நிற்கும். தமிழரிற் பரத மரபினர்க்குக் குலகுருவான விசுவாமித்திரருங்கூட ஒருகால் ஆரியர் செய்த சூழலில் அகப்பட்டு, ஆரிய அரசரான சுதாஸ் என்பவனுக்கு வேள்வியாசிரியராய்ச் சென்று, ஆரியர்க்குத் தெய்வமான இந்திரனை வணங்கி வழுத்திக், கீகடர் என்னுந் தமிழ்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_24.pdf/83&oldid=1590704" இலிருந்து மீள்விக்கப்பட்டது