உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 24.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மாணிக்கவாசகர் வரலாறும் காலமும் -3

73

பரதர்கள் அப்போரில் தோல்வி பெற்றிலராயினும், ஆரியர் செய்த சூழ்ச்சியினாலும் அச்சூழ்ச்சிக்கு உதவியாய் நின்ற தமிழரிலேயே ஒரு வகுப்பாரின் படிற் றொழுக்கத்தினாலும் அப்போரில் தமிழ் மரபினர்க்குத் தலைவராய் நின்ற பரதர்க்குப் பேரிடுக்கண்கள் நேர்ந்தன என்பது மட்டும் புலனாகின்றது. ங்ஙனம் பரதர்க்குப் பேரிடுக்கண் நேருமாறு ஆரியர்க்கு உதவிசெய்த தமிழ்வகுப்பினர், முன்னெல்லாம் அப் பரதர்க்கு நெருங்கிய உறவினருந் துணைவருமாய் நின்ற ‘பூருக்கள்' என்பவரேயாவர். இஞ்ஞான்றைத் தமிழரிற் சிலர் ஆரியர் கட்டிய சூழ்ச்சியில் அகப்பட்டுத் தம்மினத்தவராகிய தமிழரை அவ்வாரியர் இழிபு படுத்துதற்குக் கருவியாய் முன்நின் றுதவுதல்போல, அஞ்ஞான்றைத் தமிழ் வகுப்பினராகிய பூருக்களுந், தம்மவர்க்கு இரண்டகமாய் நடந்து ஆரியர்க்கு மறைந்துதவி புரிந்தமையும், அது கண்டு பரதர்க்கே உரியதான தீக்கடவுள் ஆரியரோடு உடன்கூட்டி அப் பூருக்களைப் போரிற் றொலைத்தமையும் இருக்குவேத ஏழாம் மண்டிலத்து 8ஆம் பதிகத்திற் சொல்லப்படுதலும் நினைவு கூரற்பாற்று.

எனவே, அக்காலத்து ஆரியர் தமிழரைப் போரில் வென்று இந் நாடுகளைக் கைப்பற்றின ரென்பாருரை பொருந்தாமையும், அவர் தமிழரிலேயே சில வகுப்பாரைத் தம் வயப்படுத்தி அவர் தம் இரண்டகச் செயலின் உதவியால் இந் நாடுகளை மெல்ல மெல்லக் கைப்பற்றிக் கொண்டமையுந் தாமே பெறப்படும். தமிழ்நூல்களைப் பயின்றறியாமையின் தமிழரின் நாகரிக உயர்ச்சியை நன்கு உணரப்பெறாத ஐரோப்பிய ஆசிரியரான ராகொசின் என்னும் நுண்ணறிவினர், தமிழரைவிட ஆரியரையே உயர்த்துப் பேசுங் குறிப்பினராயினும், குறிப்பினராயினும், இருக்குவேதப் பாட்டுகளை நடுநிலை திறம்பாமல் தாம் ஆராய்ந்த ஆராய்ச்சியின் முடிபாக, ஆரியர் தமிழரைப் போரில் வென்று அவர் தம் நாடுகளைக் கைப்பற்றினவர் அல்லரென்னும் எமதுகருத்தினையே தாம் அரிது ஆராய்ந்தெழுதிய 'வேத இந்தியா' என்னும் நூலில் விளக்கமாகக் கூறியிருக்கின்றார். “ஆரியர் தென்றமிழ்நாடு புகுந்தது படையெடுப்பினால் அன்று, மெல்ல மெல்ல முன் ஊர்ந்து சன்றதனாலேயாம். ஆண்மையும், விடாப்பிடியும் வலுவாய் ஒழுங்குபடுத்தப் பட்ட படையமைப்புங் குடிநெருக்கமும் உடைய தமிழர்களைத்,

66

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_24.pdf/82&oldid=1590703" இலிருந்து மீள்விக்கப்பட்டது