உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 24.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72

  • மறைமலையம் - 24

பெயரால் இது பரதகண்டம் எனப் பெயர் பெறுவதாயிற்று. இப் பரதர்கள் முதன்முதல் கடல்சார்ந்த நெய்தல் நிலத்தின்கட் குடியேறி, அதன்கட் பட்டினங்கள் அமைத்து நாகரிகத்திற் சிறந்து வாழ்ந்தனராகலின், அந்நெய்தல் நிலத்துமக்கள் ‘பரதர்’ ‘பரத்தியர்' எனப் பெயர் பெறலாயினர். வடக்கிருந்து வந்து இந்தியநாட்டின் வடமேற் கெல்லையிற் குடியேறிய ஆரியர் நாகரிகம் ல்லாதவராய், உயிர்க்கொலை புரிந்த வரைதுறை யின்றி ஊனுண்டுங்கட் குடித்தும் மகளிர் L புணர்ந்தும் நாகரிகமுடைய தமிழ்மக்கள் அருவருக்குமாறு ஒழுகினமையின் அவர்கள் இந்நாட்டுள் நுழையாதபடி அக்காலையில் அவர்களை விபாஸ்சுதுத்ரீ என்னும் ஆற்றங் கரையின் அப்பால் இப் பரதர்கள் எதிர்த்து நின்றமையும், பின்னர் அவர்கள் அவ்வாறுகளை டையூறின்றிக் கடந்து இப்பால் இனிது சேரும்படி, அப் பரதமரபினர்க்குக் குருவான விசுவாமித்திரர் அவ் யாறுகளை வேண்டி வழுத்தினமையும் இருக்குவேத மூன்றாம் மண்டிலத்தின் 33 ஆம் பதிகத்தில் நன்கெடுத்து மொழியப்படுதல் காண்க. திரித்சுக்கள் என்னும் ஆரிய வகுப்பினர் சுதாஸ் என்பவனைத் தலைவனாய்க் கொண்டுவந்த ஞான்று, மேலெடுத்துக் காட்டிய ஐவகைத் தமிழ்மரபினரில் துருவசர்களும் துருகியர்களும் அணுக்களும் பூருக்களும் ஒன்றுகூடி அவர்களைத் தடுத்து நின்று போர்புரிந்தமையும், அத் தமிழ் அரச வகுப்பினர்க்குதவியாகப் பக்தர்கள்,

பலாநர்கள், அலிநர்கள், சிவர்கள், விஷாநியர்கள் என்னும் வேறு ஐவகைத் தமிழ்க் குடியினர் ஒருங்குநின்று திரித்சுக்கள் என்னும் அவ்வாரியரோடு போராடினமையும் இருக்குவேத ஏழாம் மண்டிலத்தின் 18 ஆம் பதிகத்தில் விளக்கமாகக் கூறப்படுதல் காண்க. இப்பதிகத்தின் 13-ஆஞ் செய்யுளிற் ‘பூருக்கள்’ ஆரியரால் மிக இழித்துப் பேசப்படுதலும் நினைவிற் பதிக்கற்பாற்று. வசிட்டரைக் குருவாய்க் கொண்ட ஆரியர் திரித்சுகளுக்கும், விசுவாமித்திரரைக் குருவாய்க் கொண்ட பரதர் முதலான தமிழ்மரபினர் பதின்மர்க்கும் நிகழ்ந்தபோரில், ஆரியர்க்குத் தெய்வமான இந்திரன் பரதர்களைச் செயலற் றிருக்கச் செய்தனன் என்று இருக்குவேத ஏழாம் மண்டிலத்து 33 ஆம் பதிகத்தைச் செய்த வசிட்டக்குடியினர் தமக்குரிய அவ் விந்திர தெய்வத்தைப் புகழ்ந்து பேசிக்கொள்கின்றனர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_24.pdf/81&oldid=1590702" இலிருந்து மீள்விக்கப்பட்டது