உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 24.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66

66

  • மாணிக்கவாசகர் வரலாறும் காலமும் - 3

71

ஓ அக்நியே, வலிய படைவீரர்களையுடைய பழைய பரதர்கள் தமக்குப் பேரின்பம் வேண்டி நின்னையே இரந்தனர்” (6, 19, 4) எனவும், “ஓ பரதர்களுக்கு உரிய அக்நியே” (6, 16, 45) எனவும் இருக்குவேதம் இங்ஙனமே இன்னும் பலவிடங்களில் வற்புறுத்து ஓதுதல் கொண்டு, பண்டைத் தமிழ்மக்கட்குத் தலைவரான பரதர்களே இறைவனைத் தீ வடிவிற்கண்டு தீ வழிபடும் நுட்பத்தை முதன்முதற் கண்டுணர்ந்தன ரென்பதும், தீம்பிழம்பின் வடிவுபோல்வதாகிய திரண்டு நீண்டு குவிந்த சிவலிங்க அருட்குறிகளும் அவற்றிற்கு உறையுளாகக் கூட கோபுர மோங்கிய திருக்கோயில்களுந் தெற்கே பொதியம் முதல் வடக்கே இமயமலைகாறும் அவர் தம்மால் ஆங்காங்கு அமைக்கப்படலாயின வென்பதும் நன்கு தெளியப்படும். தீப்பிழம்பு இறைவனருளொளியோடு ஒற்றித்து விளங்கும் இவ்வரும் பேருண்மையினைப் பரதர் என்னும் பண்டைத் தமிழ்த்தலைவர் முதன்முதற் கண்டறிந்த சிறப்புப் பற்றியே அக்நியானது பாரதன்” எனப் பெயர்பெறலானமை இருக்குவேத இரண்டாம் மண்டிலத்து ஏழாம் பதிகத்தானும், அதன் முதன் மண்டிலத்து நாற்பத்து நான்காம் பதிகத்தாற் றெளியக்கிடந்தபடி அக்நிக்கு உயிராவான் ‘பகன்' என்னும் பெயருடைய சிவபிரானேயாம் உண்மையைத் தெளியக் கண்டவர் பரதரேயாம் சிறப்புப் பற்றியே உருத்திரப் பெருமானுங்கூடப் 'பரதன்' எனப் பெயர்பெற்றமை அதன் இரண்டாம் மண்டிலத்து முப்பத்தாறாம் பதிகத்தானும் இனிதுணரக்கிடக்கின்றன. ‘அக்நி’யின் உண்மைத் தன்மையும் அதன் வழியே எல்லாம்வல்ல முழுமுதற் கடவுளைக் கண்டு வழிபடுமாறுந் தென்றமிழ் நாட்டவர்க்கு உரியவாதல் பற்றியே அக்நி வடநூல்களில் ‘தக்ஷிணாக்நி’ எனப் பெயர் பெறலாயிற்று. ளக்கொளியிற் சிவவொளியைக் கண்டுதொழுங் கார்த்திகைத் திருவிழாத் தமிழ்நாட்டகத்துக் கொண்டாடப் படுமாறு போலப், பிறநாடுகளிற் கொண்டாடப் படாமையுங் கருத்திற் பதிக்கற்பாற்று!8

இங்ஙனமாக இறைவனை நெருப்பொளியிற் கண்டு வணங்கும் முறையுணர்ந்த ‘பரதர்’ பண்டைநாளில் இவ்விந்திய நாடு முழுதும் ஒருங்கு செங்கோல் ஓச்சினராகலின், அவர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_24.pdf/80&oldid=1590701" இலிருந்து மீள்விக்கப்பட்டது