உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 24.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70

66

  • மறைமலையம் - 24

ஓ அக்நியே, நின்னை மநுமுனிவன் மக்களெல்லார்க்கும் ஓர் ஒளிப்பொருளாய் ஏற்படுத்தினான்” (1, 36, 19) எனவும்,

66

(1,36,19)

ஓ, ஆதித்தியர்களே, மநுமுனிவன் தீ வளர்த்த காலையில், முதல் அவியை ஏழு ஹோத்திரிக் குருமார்களோடும் வேண்டு கோளுரையோடும் நுமக்கே சேர்ப்பித்தான்” (10,63, 7) எனவும்,

66

இறைவனை அழைப்பவனும் மநுமுனிவன் மரபினர் பாற்குடிகொண் டிருப்பவனுமான அக்நியே செல்வங்களுக்கெல்லாந் தலைவனாவான்” (1, 68) எனவும்,

ஐந்து

66

இச்

"அறிவனும் இல்லத்திற்கு இளைய தலைவனுமான அக்நி

மரபினரின்

இல்லங்கடோறுங்

காண்டிருக்கின்றான்” (7,15, 2) எனவும்,

66

குடி

இந்திராக்நியே, நீ யதுக்கள், துருவசர்கள்,

வ்வை

துருகியர்கள், அணுக்கள், பூருக்கள் என்னும் வகையினரிடங் குடிகொண்டிருத்தலால்” (1, 108, 8) எனவும் இருக்கு வேதங் கூறுமாற்றானும்,

66

இவ் வைந்து நாடுகளும், இவ் வைந்து மரபினர்களும் மநுவினிடத்திருந்தே தோன்றினர்” (3, 24, 2)

6

என அதர்வ வேதங் கூறுமாற்றானும், இவற்றோடு இணங்கவே ஆசிரியர் திருமூலருந் "தமிழ் மண்டலம் ஐந்துந் தாவிய ஞானம்” எனக் கூறுமாற்றானுந், தமிழ் முனிவராகிய மநுவும், அவர்வழித் தோன்றிய ஐந்து நாடுகளிற் குடியிருந்த ‘பஞ்ச திராவிடர்' எனப்படும் பண்டைத் தமிழ் மரபினருமே, முழுமுதற்கடவுள் தீ வடிவில் விளங்கித் தோன்றுதலை முதன்முதற் கண்டறிந்து அத் தீயின்கண் அவனை வழிபடும் முறைகளை வகுத்தன ரென்னும் அரிய பெரிய உண்மை தெளியப்படும். இவ் வைவகைத் தமிழ் மரபினர்க்குந் தலைவராய்இருந்து அந்நாளில் அரசுபுரிந்தவர்கள் பரதன் என்னுந் தமிழ் வேந்தன் வழியில் வந்தவரான பரதர்களே யாவர்.

66

‘பாரத மரபினரான தேவசிரவர், தேவவாதர் என்னும் இருவரும் பயன்மிகுந்த அக்நியை மிக்க வலிமையொடுந் தேய்த்து உயிர்ப்பித்தனர்.” (3, 23, 2) எனவும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_24.pdf/79&oldid=1590700" இலிருந்து மீள்விக்கப்பட்டது