உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 24.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* மாணிக்கவாசகர் வரலாறும் காலமும்

3

69

முக்கோண வடிவுமாய் அமைக்கப்படுதல், "மூன்றுவகைக் குறித்த முத்தீச் செல்வத்து” என்னுந் ‘திருமுருகாற்றுப்படையடிக்கு நச்சினார்க்கினியர் கூறிய உரையுள்ளுங் கண்டுகொள்க. பண்டைக்காலத்திருந்த தண்டமிழ்ச் சான்றோர் தாம் ஞாயிறு திங்கள் தீ என்னும் முத்தீயை வணங்குதற்கு அறிகுறியாக அம்மூன்றின் வடிவு போன்ற குண்டங்கள் நிலத்தின்கண் வெட்டுவித்து அவற்றின்கண் வேள்விவேட்ட நுட்பம் அறியாத பிற்காலத்தார் இக் குண்டங்களில் ஒன்றன் நாற்கோணமாக்கிப் பிழைபட்டார். அதுகிடக்க.

வடிவை

இனி, இம் முத்தீயினையும் வடநூலார், 'ஆகவநீயம்' 'காருகபத்தியம்’ ‘தக்ஷிணாக்கினி' என வழங்கினரேனும், அவற்றுள் ஆகவநீயங் காருகபத்தியம் என்னும் இரண்டுமே சதபதபிராமணம் முதலான பழைய வடநூல்களுட் காணப்படுகின்றன; ஏனைத் ‘தக்ஷிணாக்கினி' என்னும் பெயர் அவற்றின்கட் காணப்படுகின்றிலது. இருக்கு வேதத்திலுந் (2, 3, 6, 4; 3, 20, 2) தீக் கடவுளுக்கு மூன்றிருப்பிடங்கள் மட்டுஞ் சொல்லப்பட்டிருக்கின்றனவே யல்லாமல், அம் மூன்றின் பெயர்களாதல் ‘தக்ஷிணாக்கினி' என்னும் பெயராதல் ஆண்டுச் சொல்லப்பட வில்லை. மற்றுப்,புறநானூற்று உரையாசிரியரோ தக்ஷிணாக்கினியைத் 'தென்றிசையங்கி' என்றுரைக்கின்றார்; தென்றிசையங்கி என்பது தென்றிசைக் கண்ணதாகிய தமிழ்நாட்டிலே வேட்கப்படுந் தீ என்று பொருள்படுவதாகும்.

6

தீயானது எல்லாத்திசைகளில் உள்ள எல்லா நாடுகளுக்கும் உரித்தாகவும், அதனைத் தென்றிசைக் கண்ண தாகிய தமிழ்நாட்டுக்கே வரைந்து வைத்துத் 'தக்ஷிணாக்கினி' அல்லது 'தென்றிசையங்கி' எனக் கூறியதென்னை? என நுணுகிநோக்கவல்லார்க்கு, எல்லாம்வல்ல முழுமுதற் கடவுள் தீ வடிவின்கட் புலப்பட்டுத்தோன்றி விளங்குதலை முதன் முதலுணர்ந்து, அதற்கேற்ற பரிசால் தீயினை வழிபடும் முறைகளைக் கண்டறிந்து, அவ் வழிபாட்டினைச் செய்து வந்தோரும் வருவோருந் தென்றமிழ்நாட்டி லுள்ள தமிழ்ச் சான்றோர்களே யென்பது இனிது புலனாகாநிற்கும். மேலே 468 ஆம் பக்கத்திற் ‘சத்தியவிரதன்' என்னும் மநு தமிழ் முனிவனே யாதலை உயர்ந்த பல மேற்கோள்கள் கொண்டு விளக்கினாம்.

6

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_24.pdf/78&oldid=1590699" இலிருந்து மீள்விக்கப்பட்டது