உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 24.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68

  • மறைமலையம் - 24

தொல்காப்பியனார் அருளிச்செய்தனர். இன்னும், இறைவன் தீ

வடிவினன் ஆதலும் தீவடிவில் விளங்கித் தோன்றி நம்மனோர்க்கு அருள் வழங்கலும் மேலே மாணிக்கவாசகர் வரலாறு 95 ஆம் பக்கம் முதல் 99 ஆம் பக்கம் வரையில் வைத்து விரித்து விளக்கியிருக்கின்றேம். ஞாயிறுந் திங்களும் தீ தீ

னது

வேயாகலின், அவ் விரண்டொடுங் கூட்டத் தீ மூவகைத் தாதல் கண்டுகொள்க. ஏனை உலகுயிர்களில் விரவி நிற்குங்கால் இறைவன் கட்புலனாகா அருவனாய் இருத்தலின், தன்னை உயிர்கள் கட்புலனாற் கண்டுவணங்க மாட்டாவென இரங்கியே, அவர்தங் கண்கட்குப் புலனாகும் வ் வொளியுடைப் பொருள்கள் மூன்றையுந் தோற்றுவித்து, அவற்றின்கட்ட அருளொளி யுருவினைக் காட்டி அவர் தமக்குத் தன் அருளமிழ்தம் வழங்கிவரா நிற்கின்றான் என்பது. இங்ஙனமாக இறைவன்றன் அருளொளி விளக்கத்திற்கு ஓர் உறையுளா யிருந்து உயிர்கட்கு உதவுதல் குறித்தே ஞாயிறு திங்கள் தீ என்னும் மூன்றுங் கடவுளோ டொப்ப வைத்துவணங்குதலும் வாழ்த்துதலுஞ் செய்யப்படும். தமிழ்நாட்டு அந்தணர் மிகப் பழையகாலந் தொட்டே இறைவனைத் தீ வடிவில் வைத்து வணங்கி வந்தன ரென்பதும், அத்தீத்தான் ஞாயிறு திங்கள் தீ என முத்திறப்படுதலின் அவற்றிற்கு அடையாளமாக ஞாயிற்றை யொத்த வட்டவடிவிலும் பிறையை யொத்த வில்வடிவிலுந் தீயையொத்த முக்கோண வடிவிலுங் குழிகள் வெட்டுவித்து அவற்றின்கண் தீ வளர்த்து அதனை வழிபட்டு வரலாயின ரென்பதும் அறியற்பாலன. தலைச்சங்கத்திருந்த முரஞ்சியூர் முடிநாகராயர் காலத்திலேயே பொதியமலைமுதல் இமயமலை காறும் பரவியிருந்த தமிழ்நாட்டு அந்தணர் முத்தீவேட்டமை, சிறுதலை நவ்விப் பெருங்கண் மாப்பிணை

அந்தி அந்தணர் அருங்கடன் இறுக்கும் முத்தீ விளக்கிற் றுஞ்சும்

பொற்கோட் டிமயமும் பொதியமும் போன்றே

(புறநானூறு, 2)

என்று அவர் பாடியவாற்றான் அறியப்படும். இம் முத்தீயை வளர்க்கும் வேள்விக் குண்டங்களுள் ஒன்று வட்டமாய் அமைக்கப்படுதல் சதபதபிராமணம் ஏழாங்காண்டம் முதல் அத்தியாயம் முதற்பிராமணத்துள்ளும், மற்றிரண்டும் வில்வடிவும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_24.pdf/77&oldid=1590698" இலிருந்து மீள்விக்கப்பட்டது