உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 24.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* மாணிக்கவாசகர் வரலாறும் காலமும்

3

89

கலப்பராயின் அவர் பெருந்தீவினைக்குஆளாகுவரென்றும் தமக்குக் கீழ் இவ் விருவகுப்பினர் மட்டுந் தம்முடைய ஆரியநூல்களை ஓதுதற்கு உரிமையுடையரென்றுஞ் சொல்லி அவ்விருவகுப்பாரையுந் தம் மினத்தவராக்கி, அவ்வாற்றால் தமது முதன்மை அவர் தமக்குள்ளும் நிலைபெறுதற்கு இட ஞ்செய்துகொண்டனர். இங்ஙனமாக ஆரியரது சூழ்ச்சியாற் பழந்தமிழ் மக்களுக்குட் பெரியதொரு மாறுதல் நிகழ்ந்து பரவவே ஆரியரார் உயர்ந்தவராகப் பாராட்டப் படுதலும், ஆரியமொழியைக் கற்பதும், ஆரியநூல்வழி யொழுகுதலும், தமிழையுந் தமிழ்வழங்கும் ஏழைமக்களையும் இழிந்த நிலைமைக்கட் படுத்துப் பேசுதலுந் தமக்குச் சிறப்புத் தருவனவாகத் தமிழரிலேயே கற்றவருஞ் செல்வருமாயுள்ளார் கருதுவாராயினர். அதனால், தமிழரில் அரச வகுப்பினரும் பிறரும் ஆரியமொழியை விரும்பிக் கற்று, அதன்கண் உரையாடுதலும் நூல் எழுதுதலுஞ் செய்வாராயினர். இங்ஙனந் தமிழர்க்குள் ஆரியமொழியும் ஆரியர் தம் வழக்கவொழுக்கங் களும் பரவவே, அவ்வாரிய வழக்குகளுக்கு ஒருவாற்றால் உடன்பட்டிருப்பினும், அவற்றின் சிறுமையும் தமிழ் உடன்பட் டிருப்பினும், அவற்றின்சிறுமையும் தமிழ் வழக்குகளின் பெருமையும் புடைபட ஒற்றி ஆராய்ந்தளந் துணர்ந்து உண்மை கண்ட ‘ஜனகன்’ ‘அஜாதசத்துரு', 'அஸ்வபதிகை கேயன்’ ‘பிரவாகனஜைவலி' முதலான தமிழ்வேந்தர்கள், அமயம் நேர்ந்துழியெல்லாம் ஆரிய முனிவர்க்குத் தமிழ்ச்சான்றோர் நுணுகி யறிந்த மெய்ப்பொருள்களை அவர்க்குரிய ஆ ரியமொழியிலேயே யெடுத்துத் தெருட்டி, அவர்க்கு மெய்யறிவு கொளுத்தி, அவர் தம் ஆரியக் கோட்பாடுகள் பயனிலவாதன் மேலுந் தீவினைப் பலவாதலுங் காட்டி வரலாயினர். இவ்வாறு தமிழ் வேந்தர்கள் ஆரியர்க்கு அறிவுறுத்தி வந்த மெய்யுரைத் திரட்டுகளே 'உபநிடதங்கள்’ எனப்

பெயர்பெறுவவாயின. இத் தமிழ்வேந்தர்களின் பெயர்கள் ஆரியச் சொற்களா யிருத்தல் காண்டு அவரெல்லாம் ஆரியர் போலுமென மயங்கி விடற்க. சேக்கிழார் அருளிய திருத்தொண்டர் புராணத்திலுள்ள சிவனடியார் களின் தனித்தமிழ் இயற் பெயர்கள் பலவற்றை வடநூலார் தமது வடமொழியில் மொழபெயர்த்து வைத்துக் கொண்டவாறு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_24.pdf/98&oldid=1590719" இலிருந்து மீள்விக்கப்பட்டது