உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 24.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90

  • மறைமலையம் - 24

போல, அவ் வேந்தர்களின் பண்டைத் தனித்தமிழ்ப் பெயர்களும் அவ்வாறு ஆரியமொழியில் மொழிபெயர்த்து அமைக்கப் பட்டன வென்று உணர்ந்து கொள்க. இன்னும் தமிழரச வகுப்பினின்றுந் துறவுபுகுந்த 'விசுவாமித்திரர்', ‘தேவாபி’ முதலான முனிவரர்களும் ஆரிய மொழியைக் கற்று அதிற் பெரும்புலமைமிக்கு, ஆரியர் கைக்கொண்டு போதருஞ் சிறுதெய்வ வணக்கத்தையும் உயிர்க்கொலை வெறியாட்டு வேள்விகளையுந் தொலைப்பான் வேண்டியே ஞாயிறு திங்கள் தீ என்னும் ஒளிவடிவுகண் மேலும், அவற்றின்கண் ணெல்லாம் அரு ளொளி வடிவினராய் விளங்குஞ் சிவபிரான் மேலும் பற்பல பதிகங்களை ஆரியர்க்கு மாறாய் அவர்தம் ஆரிய மொழியிலேயே இயற்றி, அவை தம்மைத் தாம் முழுமுதற் கடவுளை வழிபடுங் காலங்களிற் பயன் படுத்திவந்தனர். இவ்வாறு விசுவாமித்திரர் முதலாயினார் ஆரியமொழியிற் பதிகங்களும் நூல்கள் இயற்றினும் அவரெல்லாந் தமிழ் வகுப்பினராதலை யுணர்ந்தன்றே மநுமிருதியும் (10,45),

"இருபிறப்பாள ரல்லாத மற்றை எல்லா வகுப்பினரும் மிலேச்சர்தம் மொழியைப் பேசினும் அல்லது ஆரியர்தம் மொழியைப் பேசினும் அவரெல்லாந் தஸ்யுக்களேயாவர்”

எனக் கூறுவதாயிற்று. இதனால் ஆரியரல்லாத தமிழரும் பிறரும் அக்காலத்தில் ஆரியமொழியைப் பேசினாரென்பது பெறப்படுகின்றதன்றோ?

தஸ்யுக்க ளெனப்பட்ட தமிழரில், அரசராயினாரையும் அவருட் டுறவுநிலை புக்காரையுஞ் செல்வவள முடை யாரையும் வேறு போக்கின்மையாலே க்ஷத்திரிய வைசிய வகுப்பின்கட் சேர்த்துக்கொண்ட ஆரியர் அங்ஙனஞ் சேர்க்கப்பட்ட அவர்கள் தமக்கு மாறான தஸ்யுக்களே என்பதனை அமயம் வாய்த்துழியெல்லாம் வெளிப்படையாகச் சொல்லியே வந்திருக்கின்றனர். 'அஜீகர்த்தன்' என்னும் ஆரியப் பார்ப்பனன், தன்மகன் 'சுநஸ்ஸேபனை' வேள்விக்களத்தில் வெட்டி வருணனுக்குப் பலியூட்ட வேண்டிக் கேட்ட 'ரோகிதன்’ என்பவன்பால் நூறு கறவைமாடுகளை வாங்கிக்கொண்டு அவனை அவனுக்கு விற்றுவிட்டது மன்றி, வேள்விக்களத்திற் காணரப்பட்ட தன்மகனைக் கழுத்தறுப்பதற்கு வேறு யாருந்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_24.pdf/99&oldid=1590720" இலிருந்து மீள்விக்கப்பட்டது