உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 24.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* மாணிக்கவாசகர் வரலாறும் காலமும்

அழாநிற்ப,

அதுகண்டு

3

91

துணியாராய்ப் பின் வாங்கிநிற்றல் கண்டு, தனக்கு இன்னும் இருநூறு கறவைகள் கொடுத்தால் தானே தன் மகன் கழுத்தை வெட்டுவதாகச் சொல்லி, அங்ஙனமே இருநூறு கறவைகள் கொடுக்கப் பெற்றுக்கொண்டு அவ்விளைஞன் கழுத்தைக் கத்திகொண்டு அரியப்போகையில், அம்மகன் தன்தந்தையின் கொடுஞ்செயலைக்கண்டு அலறிக் கடவுளரை வேண்டி பெரிதும் நெஞ்சங்கரைந்த விசுவாமித்திரர் அச் சுநஸ்ஸேபனை அக்கொலைக்குத் தப்புவித்து, அவனைத் தம் மக்கள் எல்லார்க்கும் மூத்த தலைமகனாக ஏற்றுச் சிறப்புச்செய்தமையும், அதே நேரத்தில் அச் சுநஸ்ஸேபன் விசுவாமித்திரரை நோக்கி, "ஓ பரதர் களுக்குத் தலைவரே” என்று விளித்து நுங்கள் புதல்வர்கள் இசைந்தால், எனக்கு நன்மையுண்டாமாறும் யான் தங்கட்கு மகனாந் தன்மையடையுமாறும் அவர்கள் என்பால் நேயமாய் இருக்கக் கற்பியுங்கள்” என்று வேண்ட, அவரும் அதற்கு ஒருப்பட்டுக் தம்மக்கள் நூறுபேர்க்குந் தம் துணிபு தெரிவிக்க, அவருள் ‘மதுச்சந்தர்’ எனப்படும் இளைஞர் ஐம்பதின்மர்க்கு மூத்த ஐம்பதின்மர் மட்டும் அதற்கு உடன்படாராக, அதனால் விசுவாமித்திரர் அவர்மேற் சினங்கொண்டு “நும் வழியில் வருவார் இந் நாட்டை விட்டகன்று இதன் எல்லைப் புறங்களில் இருக்க” என்று வைதமையால் அம் மரபினரே ஆந்திரர், புண்டரர், சபரர், புளிந்தர், மூதிபர் ஆனமையும், தஸ்யுக்களிற் பெரும்பாலார் விசுவாமித்திரர் வழித்தோன்றினமையும் ஐதரேய பிராமணம் ஏழாம் இயலிலில் (13 முதல் 18 வரையில் தெளித்துரைக்கப் பட்டிருத்தல் காண்க. இதனால், ஆரியப்பார்ப்பனர் தாம் பொருண்மேல் வைத்த பேரவாவால் 6 எத்தகைய கொடுந் தொழிலுஞ் செய்தற்குப் பின் இடை யாராதலும், தமிழ்ச் சான்றோர் இடருற்ற ஆரியர் மாட்டும் பேரிரக்கமுடையராய் அவர்க்குப் பேருதவி புரிவாராதலும், ஆரியரல்லாத தஸ்யுக்க ளெல்லார்க்கும் பிறப்பிடமாவார் சுவாமித்திர மரபினரே யாதலும், தஸ்யுக்களிற் சிறந்த ‘பரதர்க்கு' விசுவாமித்திரரே முதற்குரவராதலும், ஆரியர் நேரத்திற்குத் தக்கவாறு தம்மவரல்லாதாரை ஒருகால் தஸ்யுக்களென இகழ்ந்தும் பிறிதொருகால் க்ஷத்திரியர் வைசியரெனத் தம்மோடு இனப்படுத்திப் புகழ்ந்துந் தமிழரை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_24.pdf/100&oldid=1590721" இலிருந்து மீள்விக்கப்பட்டது