உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 24.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92

  • மறைமலையம் - 24

ஏமாற்றும் நீரராதலும் இனிது விளங்குகின்றனவல்லவோ? இன்னும், விசுவாமித்திர மரபினர் உயர்ந்த மெய்ப்பொரு ளுணர்ச்சி யுடையரென் பதூஉம், தாம் அரிதின் உணர்ந்த மெய்ப்பொருள்களை, அவை யுணராத ஆரியமரபின் வழிவந்த சுநஸ்ஸேபனுக்கு அவர் அறிவுறுத்தின ரென்பதூஉம், விசுவாமித்திர மரபினரான காதினர்க்கு ஆரியவேதங்களின் வேறாகத் தெய்வத்தன்மை பொருந்திய மற்றொரு வேதம் இருந்ததென்பதூஉம் அவ் ஐதரேய பிராமணமே நன்கு உரை தருகின்றது.இவ் விசுவாமித்திர மரபினர்க்குரிய தெய்விகவேதமே அறம் பொருள் வீடு என்னும் நாற்பொரு ளியல்புகளையும், சிவபிரானையும், அவன் முனைத்து விளக்கும் முத்தீ வழிபாடுகளையும் உணர்த்தும் பண்டைத் தமிழ்வேத மாதலுந் தானே பெறப்படும்.

இன்பம்

L

இன்னுந், தமக்கு உதவியுந் துணையுமா யிருந்து, தாஞ்செய்து போந்த உயிர்க்கொலை வேள்விகளை நடத்தி வந்த வரையில் தமிழரை க்ஷத்திரியராக வைத்துத் தம்மோடினப்படுத்திக் கொண்டாடிய ஆரியர், பின்னர்த் தம்மைஅவர் ஒரு பொருட் படுத்தாரானவழி, உடனே அவரை இழிந்தவராக்கிவிட லாயினர். இது, “வேள்வி யாற்றாமை யாலும் பிராமணரோடு உறவு கலவாமையாலும், க்ஷத்திரிய மரபினரான பௌண்டரகர், ஓட்ரர், திராவிடர், காம்போஜர், யவனர், சகர், பாரதர், பல்லவர், சீனர், கிராதர், தரதர், கசர், என்பார் வரவரச் சாதிப்புறம்பான விருஷலரின் நிலையை யடைந்தனர்’ என மநுவும் (10, 13, 44), மாபாரத அநுசாசன பருவமும் (2103) உரைக்குமாற்றால் நன்குணரப்படும். மேற்குறித்த தமிழரச மரபினர் அனைவரையும் ஆரியர் 'தஸ்யுக்கள்' எனவே கொண்டு கழ்ந்தன ரென்பதற்கு, மாபாரத துரோண பருவம் (4747), ஆயிரக்கணக்கான காம்போஜர், சகர், சபரர், கிராதர், வர்வரர் என்பாரின் குருதியினாலுந் தசையினாலும் இவ் வழகிய நிலத்தைச் 'சைநேயன்' சோற்றுத் திரளை யாக்கினான்; கத்தரிக்கப்பட்டுத் தலையில் மயிர் இலராயினும் நீண்ட தாடிமயிரினை யுடைய தஸ்யுக்களின் தலைகளாலும்; அவர் தம் முடிகளாலும் மூடுண்ட நிலம், இறகிழந்த பறவைகளால் மூடுண்ட நிலம்போன் றிருந்தது” எனக் கூறுதலே சான்றாம். இதனோ டொப்பவே அரிவம்சமும் (773), “சகர்,யவனர்,

66

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_24.pdf/101&oldid=1590722" இலிருந்து மீள்விக்கப்பட்டது