உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 24.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மாணிக்கவாசகர் வரலாறும் காலமும் - 3 *

93

காம்போஜர், பாரதர், பல்லவர், கோலிசர்ப்பர், மகிஷர், தார்வர், சோழர், கேரளர் முதலிய அனைவரும் க்ஷத்திரிய ராகவேயிருந்தனர்; ஆனால் வசிட்டருடைய சொல்லால் ய தூண்டப்பட்ட சிறந்த சகரவேந்தனால் அவர்கள் தமக்குரிய வாழ்க்கை யுயர்வினையுஞ் நிலையினையும்

சமய

இழக்கலாயினர்”என உரைத்தல் காண்க. மேலே குறித்துக் காட்டப்பட்ட இனத்தவர் பற்பலரும் பண்டைத் தமிழ் வகுப்பினராதலும், ஆரியர் இங்கு வருதற்கு முன்னரே இந் நாட்டின் பற்பல பகுதிகளிலுங் குடியேறி அவற்றை அரசாண்ட அத்தமிழ் மக்கள் தம்பால் வந்து அடைக்கலம் புகுந்த ஆரியர் தம் சூழல்களிற் சிக்குண்டு அவர் தஞ் சொற்படி, நடந்து வந்த வரையில் அவர் தம்மை ‘க்ஷத்திரியர்’ ‘வைசியர்’ எனப் பெயர் வைத்துச் சீராட்டிவந்த ஆரியர், பின்னர்த் தம் தீவினைச் சயல்களைக் கண்டு தம்மை அத் தமிழ்மக்கள் அருவருத்து விட்ட வுடனே அவர் தமக்கெல்லாம் 'தஸ்யுக்கள் என ஓர் இழிந்த பெயர் வைத்து அவரை ஒருங்கே இழித்துரைக்கலானதும், இவ்வாறாகத் தமிழரை இழித்துரைக்குமாறு ஆரியரை ஏவினவர் ஆரியர்க்குக் குருவான மேற்காட்டிய வடமொழி நூல்களின் உரைகளினாலேயே நன்கு தெளியப்படுகின்றன அல்லவோ?

வசிட்டரேயாதலும்

இனி, இஞ்ஞான்று தம்மைப் பார்ப்பனரென உயர்த்துப் பேசிக்கொள்வாரும், அப் பார்ப்பனரைப் பின்பற்றி யொழுகி அவ்வாற்றால் தமக்கு உயர்வு தேடிக்கொள்வாரும் ஏனைப் பொதுமக்களை இழிந்த நிலைமைக்காட்படுத்து நடத்தும் இயல்புகளை உற்றுக்காண வல்லார்க்குப், பண்டைக் காலத்துப் பார்ப்பனரின் ஒழுகலாறுகளும் இவர் தம்மோடொத்த இயல்பினவாம் உண்மை தெற்றெனப் புலனாகாநிற்கும். மேல்நாட்டிலிருந்து போந்து இந்நாட்டை அரசாளும் ஆங்கில நன்மக்களின் மொழியையும் அவர்தம் நடையுடை வழக்கங்களையும் பின்பற்றி அவர்பாற் பல சிறப்புக்களையும் பெற முந்துவோர் பார்ப்பனரேயாவர். ஏனைப் பொதுமக்களின் வேறாகத் தம்மைப் பிரித்து உயர்த்துதற்கும், செல்வ வாழ்க்கை யிற் றலைமைபெற்று வாழ்தற்கும் ஏதுவாவது ஆங்கில மக்களின் நாகரிகத்தைத் தழுவி யொழுகுதலே எனக் கண்டுகொண்ட நான் தொட்டுப், பார்ப்பனர் பெரும்பாலும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_24.pdf/102&oldid=1590723" இலிருந்து மீள்விக்கப்பட்டது