உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 24.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94

  • மறைமலையம் - 24

ஆங்கில மொழியையே கற்றலும், அதனாலேயே உரையாடு தலும், ஏனைத் தமிழரையுந் தமிழையுஞ் 'சூத்திரர்’, 'சூத்திர பாஷை' என இகழ்தலுஞ் செய்தல் எவரும் உணர்ந்ததேயாம். இங்ஙனமே பண்டைநாளி லிருந்த பார்ப்பனருஞ், தம்மைத் தமிழரின் வேறாக உயர்த்துதற்கு வாயிலாவது ஆரியமொழியையும் ஆரிய ரொழுகலாற்றையும் பின்பற்றுதலே எனக் கண்டவளவானே ஆரிய மொழியைக் கற்று ஆரிய வழக்குகளைத் தழுவித், தமிழரெல்லாரையுந் 'தஸ்யுக்கள்’ எனவுந் தமிழரின் மொழியை 'மிலேச்சமொழி' எனவும் இகழ்ந்துரைப்பா ராயினர். இஞ்ஞான்றைப் பார்ப்பனர், தமிழரிற் சிறந்த அரசரையும் செல்வ வாழ்க்கையிற் பெரிய வணிகரையும் அவ்வாறிகழ்ந் தொதுக்குதல் ஆகாமல் அவரைத் தாம் சார்ந்து பிழைக்கவேண்டியிருத்தல் கண்டு, அவரை 'க்ஷத்திரிய வைசிய' வகுப்பின்பாற் படுத்துக் கொண்டாடுதல் போலவே, பண்டைப் பார்ப்பனருந் தமிழ் அரசரையும் வணிகரையும் 'க்ஷத்திரிய வைசிய’ வகுப்பின்பாற்படுத்துக் காண்ட ாடலாயினர். திருவனந்தை அரசர், மைசூர் அரசர் முதலாயினாரை 'க்ஷத்திரியர்' எனவும், நாட்டுக்கோட்டை வணிகரை ‘வைசியர்' எனவுங் கொண்டாடி, அவர்பாலுள்ள பொருட்டிரளையும் பிறநலங்களையும் இஞ்ஞான்றைப் பார்ப்பனர் கொள்ளை கொண்டு நுகர்தல் காண்க. இவர் தம் பாராட்டுரையில் மயங்கி இவ் வரசரும் இவ் வணிகருந் தம்மை அப் பார்ப்பனருக்கு அடுத்த நிலையில் உயர்ந்தவராகக் கருதி வைத்துக்கொண்டு தம் மினத்தவரான ஏனைத் தமிழ்மக்களெல்லாரையுஞ் 'சூத்திரர்' என இகழ்ந்துரைத்து ஒழுகுதல் போலவே, பண்டைத் தமிழ்மன்னரும் வணிகரும் பார்ப்பனர்தம் பொய்ப் பாராட்டுரையில் வீழ்ந்து தம்மினத்தவரையுந் தமிழையும் புறம்பழித்து வந்தனர். இன்னும் இஞ்ஞான்று, பார்ப்பனர் தம் பாராட்டினையே பெரிதாகக் கருதிப் பிழைப்பா ரெல்லாருந், தம்மோடொத்த தமிழர்பாற் சிறிதும் உறவுகலக்க இசையாராய், அப் பார்ப்பனர்பாலும் உறவுகலத்தல் இசையாதேனும் அவர் தம் புறக்கடை வாயிலிற் காத்திருந்து அவர் வீசியெறியவும் எச்சிற் சோற்றை யுண்டு, அப் பார்ப்பனர்தந் தெய்வத் தன்மையினையும் அவர்தம் ஆரியமொழி நூல்களின் தெய்வத் தன்மையினையும் அப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_24.pdf/103&oldid=1590724" இலிருந்து மீள்விக்கப்பட்டது