உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 24.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* மாணிக்கவாசகர் வரலாறும் காலமும்

அலறுதல்போலவே,

3

95

பார்ப்பனரினும் பார்க்க உயர்த்துப் பேசித் ‘திருநாவுக்கரசர்’ 'மெய்கண்ட தேவர்’, ‘சேக்கிழார்’ முதலான அருட் பேராசிரியர்களையும் பார்ப்பனர் கூறுஞ் சூத்திர வகுப்பின்பாற் படுத்து,அவர் அருளிச்செய்த அருள் நூல்களையும் வடமொழியிலிருந்து கடன்கொள்ளப்பட்டன வாக மொழிந்து, உண்மைக்கு மாறான பொய்ப்படுகுழியில் வீழ்ந்து அலகைபோல் அஞ்ஞான்றைப் பார்ப்பனர் தம் பாராட்டினை விழைந்த தமிழருங் கோடரிக்காம்பை யொப்பத் தம்மினத்தவர்க்குந் தமது தமிழ்மொழிக்கும் இழைத்த தீங்குகள் அளப்பில. தமிழர்க்குந் தமிழ்க்குந் தமிழ்நாட்டுக்கும் ஆரியரால் விளைந்த பொல்லாங்குகளை விடத், தம்மை அவ் ஆரிய இனத்திற் பார்ப்பனராலும், அவர் தம்மால் ஒதுக்கப்பட்டிருந்தே அவர் தம் பாராட்டுரையினை மேலதாகக் கருதி அவர்வழிச் சார்ந்தொழுகிய தமிழராலும் விளைந்த பொல்லாங்குகளே மிக்க கொடியனவாமென்று உணர்ந்து

சேர்த்துக்கொண்ட

கொள்க.

இஞ்ஞான்று ஆரியர் என ஒரு தனி வகுப்பார் காணப்பட்டிலரேனுந், தமிழரிலிருந்தே பெருந்தொகையினர் ஆரியராய் மாறிப் பார்ப்பனர் பெயர் புனைந்து வடமொழி நூல்களை ஓதித், தமிழர்க்குந் தமிழ்மொழிக்குந், தமிழ்த்தெய்வக் கொள்கைக்கும் மாறாய் நின்று வருதல் போலவே, அஞ்ஞான்றுந் தமிழ்வகுப்பினரும் பிறருரும் பெருந்தொகை யினராய் ஆரியர் ஒழுகலாறுகளைக் கைக்கொண்டு வடநூல்களைப் பயின்று தமிழ்வழக்குக்கு முழுமாறாய் நின்றனர் என்க. இப் பெற்றியினரால் எழுதப்பட்டனவே வடமொழியில் உள்ள பல பிராமணங்கள், கல்ப சூத்திரங்கள், மீமாஞ்சை, பொய்க்கதை பொதிந்த புராணங்கள் முதலாயின வாகுமென்று உணர்ந்துகொள்க. இனி, இஞ்ஞான்றும் பார்ப்பனர் கட்டிய பொய் வழக்குகளின் பெற்றிதேற்றி, அருளொழுக்கமாட்சியும் முழுமுதற் கடவுள் வழிபாடுந் தெருட்டுவார் உளராதல் போலவே, அஞ்ஞான்றுங்குடி கொலை மலிந்த ஆரிய வேள்வியின் தீவினைப் பெற்றியுஞ் சிறுதெய்வ வணக்கச் சிறுமையுந் தேற்றி அன்பும் அருளும் பெருகச்செய்த தமிழ்ச்சான்றோரும் உளர். அவர் அருளிச் செய்தனவே: முத்தீ வேள்வியும் உருத்திர வழிபாடுஞ் சிறந்தெடுத்துக் கூறும் இருக்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_24.pdf/104&oldid=1590725" இலிருந்து மீள்விக்கப்பட்டது