உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 24.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96

  • மறைமலையம் - 24

ஏனை

எசுர் சாம அதர்வ வேதப் பதிகங்கள் சில பலவும், உண்மைவழா உபநிடதங்களும், சாங்கிய போக வைசேடிக நையாயிக வேதாந்த சூத்திரங்களும், மற்சம் வாயு முதலான சில புராணங்களும், பௌட்கரம், மிருகேந்திரம் முதலான சில சிவகாமங்களும் பிறவுமாம். இஞ்ஞான்றும் ஆங்கில மொழியைக்கற்று அதன்கண் நலங்கிளரும் நூல்கள் பல இயற்றுந் தமிழர்களும் வகுப்பினரும் உளராயினாற்போலவே, அஞ்ஞான்றும் ஆரியமொழியைக் கற்று அதன்கட் பயன் பெருகும் நால்வேதப் பதிகங்களும் உபநிடதம் முதலிய அறிவுநூல்களும் இயற்றின தமிழ்ச்சன்றோர் பலரும் உளரானார் என்று தெளிக. இஞ்ஞான்றை ஆங்கிலமொழியில் ஆங்கிலரும் ஆங்கில ரல்லாத பிறரும் இயற்றிய நூல்களில் அவ்வவர் இயற்கைகளும் அவ்வவர்க்குரிய கோட்பாடுகளும் பிரித்தறி யலாம்படி விளங்கிக் கிடத்தல் போலவே, அஞ்ஞான்றை ஆரிய மொழி யுளும் ஆரியரும் அவரைப் பின்பற்றினாருந் தமிழ்ச்சான்றோரும் ஏனைப் பிறரும் இயற்றிய பதிகங்களும் நூல்களும் அவரவர்க்குரிய இயற்கையுங் கோட்பாடுகளும் பொருந்தப் பெற்றனவாய், நுண்ணறிவினார்க்கு, இவை ஆரியர் இயற்றின, இவைதமிழர் இயற்றின இவை ஏனைப் பிறர் இயற்றினவென்று பிரித்தறியலாம்படி விளங்கி நிற்குமென்க. எனவே, ஆரியமொழியில் தமிழ்ச்சான்றோர், அருளிச் செய்த பதிகங்களும் நூல்களும் விரவி நிற்கும் இயல்பு ஆராய்ச்சி யறிவுடையார்க் கெல்லாந் தெற்றென விளங்கிக் கிடக்கு மென்க. பண்டுதொட்டே பல்வேறு நாடுகளிலுள்ள பல்வேறு மக்கட் பிரிவினருந் தத்தம் நாடுகளை விட்டகன்று ஏனை நாடுகளில் உள்ள ஏனை மக்களோடு கலந்துறவாடி வந்தன ராகலின், அவர் தம்முள் ஒரு வகுப்பினர் ஏனை வகுப்பினரின் நடையுடை வழக்கங்களைப் பின்பற்றி யொழுகுதலும் அவரது மொழியைத் தாங் கற்றலும் அம் மொழியில் தாம் நூல்கள் இயற்றுதலும் இயற்கையாய் நிகழப் பெறுமாறு வரலாற்று நூலுணர்ச்சி யுடையார்க்கெல்லாம் இனிது விளங்கிக் கிடப்பதொன்றேயாம். ஆகவே, தமிழ்ச்சான்றோர் அருளிச் செய்த பதிகங்களும், நூல்களும், அவர்தங் கோட்பாடுகளும் ஆரியமொழியிற் புகுந்து நிலைபெறலானது ஒரு புதுமை யன்றென ஓர்ந்து கொள்க.

வி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_24.pdf/105&oldid=1590726" இலிருந்து மீள்விக்கப்பட்டது