உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 24.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* மாணிக்கவாசகர் வரலாறும் காலமும்

3

97

என்றிதுகாறும் விளக்கியவாற்றாற், பிறப்பு இறப்பு இல்லா அருளொளி வடிவினனாகிய எல்லாம்வல்ல முழுமுதற் கடவுள், எத்துணையும் பெரிய தனது முழுமுதற்றன்மையை எத்துணையுஞ் சிறிய எம்மனோர் ஒருவாற்றானாயினுங் கண்டு வழிபட்டு உய்தற்பொருட்டு, எம்மனோர் கண்கட்குப் புலனாம் நெருப்பொளியில் விளங்கித் தோன்றிநிற்கும் உண்மையினை முதன்முதற் கண்டறிந்தோர் பரதர் என்னும் பண்டைத் தனித் தலைமைத் தமிழ்ச்சான்றோரே யாவ ரென்பதூஉம், அவ் வுண்மைக்கு மாறாகாமலே இருக்கு வேதம் அனல் வழிபாட்டை ஓதும் இடங்களிலெல்லாம் அதனைக் கண்டறிந்தவர் ‘பரதரே’ ஆவர் எனவும், அதனால் அனற் கடவுளும் அக் கடவுளற்கு உயிராய் விளங்குஞ் சிவபிரானும் ‘பாரதன்’ ‘பரதன் எனப்பெயர் பெறுவரெனவுந் தெளியக் கூறுவதாயிற் றென்பதூஉம், தீப்பிழம்பின் வாயிலாக எல்லாம் வல்ல முதல்வனை நேரே கண்டுவணங்கும் மாப்பெரு வணக்கத்தை முதன்முதற் கண்டவர் தென்றமிழ் நாட்டின்கட் பண்டிருந்த தமிழ்ச் சான்றோரேயாதல் பற்றியே தீக்கடவுள் வணக்கத்தைத் தென்றிசைக் குரியதாக்கி அதனைத் 'தக்ஷிணாக்கிநி' என வடநூல்களெல்லாம் ஒருமுகமாக நின்று ஒத்துரைப்பவாயின வென்பதூஉம், தீப்பிழம்பானது 'ஞாயிறு' 'திங்கள்' 'தீ' என முத்திறப்பட்டு நிற்றலின் அம் மூன்றினும் விளங்கித் தோன்றும் இறைவனை வழிபடும் வேள்வியினையும் முத்திறப்படுமாறு வைத்து வேட்டு வந்தவர் இமயம் முதற் குமரியீறாகக் கிடந்த இப்பரத நாட்டின்கட் பண்டுவைகிய தமிழந்தணரே யாவரென்பதூஉம், விசுவாமித்திரர் முதலான தமிழந்தணர் வேட்ட முத்தீ வேள்வி சிவபிரான்மேற்றாய்க் குடி கொலை இல்லா அருளொழுக்க வழிபாட்டின்பாலதாதல் பற்றியே அம்மெய்ம்மையினை ஓதாதுணர்ந்த அருளாசிரியரான திருஞானசம்பந்தப் பெருமான் அதனை "வேதவேள்வி” என மீக்கூறுவாராயினரென்பதூஉம், தமிழந்தணர் வேட்டமுத்தீ வேள்வியின் நுண்பொருள் மறைநுட்பம் அறியப்பெறாத பருப்பொருளறிவினரான ஆரியப் பார்ப்பனர் தாமும் அவர்போல் வேள்வியாற்றப் புகுந்து தமக்குரிய ஊனையும் கள்ளையும் படைத்து இந்திரன் முதலான சிறுதெய்வங்களை வணங்கி வெறியாட் டயர்ந்து வந்தமை கண்டே சைவசமய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_24.pdf/106&oldid=1590727" இலிருந்து மீள்விக்கப்பட்டது