உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 24.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98

  • மறைமலையம் - 24

ஆசிரியரான திருநாவுக்கரசு நாயனார் அவரையும் அவர் செய்துபோந்த வழிபாடுகளையும் வருந்தி இகழ்ந்துரைப்பா ராயினரென்பதூஉம் தமிழ்ச்சான்றோர் வேட்ட முத்தீ வழிபாட்டினையே பண்டைத் தமிழ்ப் பேராசிரியரான தொல்காப்பியனார், “கொடிநிலை கந்தழி வள்ளி” என்னும் பொருளதிகாரச் சூத்திரத்திற் கடவுள் வாழ்த்தின் பாற்படுப்பாராயின ரென்பதூஉம், முத்தீயும் இறைவனுக்குத் திருமேனிபோல் விளங்குவதோடு அவற்கு மூன்றுவிழிகள் போலவுங் காணப்படுதல் குறித்தே இறைவன் அவை தம்மைக் உடை ய 'முக்கண்ணன்' எனப்

கண்களாக

பயர்

பெறுவானாயின னென்பதூஉம் இனிது பெறக்கிடந்தமை கண்டுகொள்க. ஆசிரியர் தொல்காப்பியனார் குறித்த முத்தீ வழிபாடு, குடி கொலைமுதலான குற்றங்கள் உடையதல்லாமை பற்றியே அதனை “வடு நீங்கு சிறப்பு" வாய்ந்ததென அவர் ஓதினார். அவர் அதனை அவ்வா றோதவே, ஏனை ஆரியர் செய்துபோந்த வேள்விக ளெல்லாங் குடி கொலை முதலான குற்றங்கள் உடையவாதலுந் தானே பெறப்படும். அதுநிற்க.

னிப், பண்டைக் காலத்துத் தண்டமிழ் அந்தணர் காண்ட தவ வடிவம் முழுமுதற் கடவுளின் திருவருளுருவத் தோடு ஒத்த இயல்பிற்றாதல் காட்டப்புக்க முறையில், இறைவற்கு ஒளியுடைப் பொருள்கள் மூன்றும் மூன்று வத்து உருவகப்படுத்தப்பட்ட உண்மை இத்துணை விரிந்தமையின் எஞ்சியவற்றைச் சுருக்கமாக எடுத்து ஆராய்ந்து காட்டுதும்.

கண்களாக

6

முனைத்து

விளங்கு

இறைவன் ஞாயிற்றின்கண் 6 வோனாகலின், அஞ்ஞாயிற்றினை அவற்கொரு திருமுகமாகக் கொண்டு, கீழ்பால் எழூஉம் ஞாயிற்றின் உச்சியிலும் மேல்பால் விழூஉம் ஞாயிற்றின் உச்சியிலும் வானின்கட் படர்ந்து காணப்படும் முகிற்குழாங்க ளெல்லாங் கதிரவன்றன் செவ்வொளி தோயப்பெற்று அவற்குச் செக்கர்ச் சடைபோற் றோன்றுதல் பற்றி, அவை தாமே அவற்குச் செஞ்சடைக் கற்றைகளாக வைத்து நுவலப்பட்டன இதனானன்றோ இறைவற்குச் 'சடையன்' என்னும் பெயருந்தொன்றுதொட்டு வழங்கிவரா நிற்கின்றது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_24.pdf/107&oldid=1590728" இலிருந்து மீள்விக்கப்பட்டது