உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 24.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* மாணிக்கவாசகர் வரலாறும் காலமும்

3

99

இனி, வானின்கட் படர்ந்துள்ள முகிற்குழாங்கள் அத்துணையும் நீராவிப் படலங்களே யாகையாலும், அப்படலங்கள் தம்மேற் குளிர்ங் காற்று வீசியளவானே வானினின்றும் மழைத் துளிகளாய்க் கீழ் இறங்குகையாலும், அம் முகிற்குழாங்களை இறைவற்குச் சடைக்கற்றைகளாகக் கூறிய தமிழ்ச்சான்றோர், அம் முகிற் குழாத்திலுள்ள தூயநீரை அச் சடைக்கற்றையில் வைகிய கங்கை நீராகவும், வானினின்றும் மலைமேல் இறங்கி நிலத்திலிழியும் அம் மழைநீரை இறைவன்றன் சடைமுடியினின்றும் பனிமலை (இமயமலை)யில் வீழ்ந்து கீழ் இழியுங் கங்கையாறாகவும் வைத்து உருவகப்படுத்தி யுரைப்பாராயினர்.

L

இனி ஒருநாட் காலையில் கீழ்பால் எழூஉம் ஞாயிறு புதிய இளமைச் செவ்வி வாய்ந்ததாய் இருத்தலானும், கீழ்கடலின் எல்லைப்புறத்தினின்றும் எழுந்து ஞாயிறு மேல் இவருங்கால் அக் கடல்நீரின் மேற்பரப்பெல்லாம் மயிலின் நிறம்போல் நீலமும் பசுமையுங் காலத்து ஒளிருதலானும், விடியற்காலை

அவ்

ஞாயிற்றின்கண் விளங்கித் தோன்றும் இறைவற்கு 'இளையோன்' என்று பொருள்படும் முருகன் என்னும் பெயரை வைத்து, அஞ் ஞாயிற்றின் கீழ்ப் பச்சென்று காணப்படுங் கடற்பரப்பினை அவன் ஊர்ந்து செல்லும் மயிலாக வழங்குவாராயினர். பண்டைத்தமிழ் மக்களாகிய ‘பரதர்’ என்பார் கடற்கரையடுத்த இடங்களில் முதன்முதல் வைகி உயிர் வாழ்ந்தனர் என்பதை மேலே காட்டினம். அவ்வா றுயிர்வாழ்ந்த மிகப்பழைய காலத்தேதான் அவர் தாம் வணங்கிய முழுமுதற்கடவுளை முருகன் என்னும் பெயரான் வழங்கினர். காலைஞாயிற்றின் கட் கட்புலனாய் விளங்கிய முதல்வனை இளையனெனக் கொண்டு வணங்கிய அவர், அதன் பிற்பொழுது முதிர்ந்த மாலை ஞாயிற்றின்கட் டோன்றிய இறைவனை முதியோன் எனக்கொண்டு,அங்ஙனங் கொள்ளினும் அவ்விருவரும் ஒருவரேயாதல் தெரிந்து, அவர் தம் ஒற்றுமை தெரிப்பான் வேண்டி அம் முதியோன் ‘முருகன் தாதை'யே யாவன் எனவும் மிகவுஞ் சிவந்த நிறத்ததாய் விளங்கும் அம்மாலை ஞாயிற்றின்கண் ல 6 வைகுவானான அப்பெருமானுஞ் சிவன் எனுஞ் சிறந்த நிறத்தினனே

6

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_24.pdf/108&oldid=1590729" இலிருந்து மீள்விக்கப்பட்டது