உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 25.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

128

மறைமலையம் – 25

காலமாய் நீண்டு எங்கும் ஒளியின்மையால் அவை தமக் கெல்லாம் ஆற்றொணாய் பெருந்துயரை விளைத்தது. அவை பட்ட துயர் நீங்குதற்குக் கழுவாயாக நீ நம்மை அகன்று மண்ணுலகிற் சென்று காஞ்சி என்னும் நமக்கினிய மாநகரில் நம்மைச் சிவலிங்க வடிவில் வைத்து வழிபாடு ஆற்றுதி!'என்று கூறி விடுப்ப, அம்மையும் இறைவனைப் பிரிதலாற்றாளாய்ப் பிரிந்துபோந்து கச்சியிற் கம்மையாற்றங்கரையிற் சிவலிங்கப் பெருமானை எழுந்தருளச் செய்து வழிபட்டுவருங்கால், ஐயன் றிருக்குறிப்பால் அவ் யாற்றில் வெள்ளம்பெருகிப் பொங்கி மண்ணால் எழுப்பிய சிவலிங்க வடிவின்மேல் வந்துதாவ, அதுகண்டு அம்மை ஆற்றாளாய்ப் பெரிதும் மனங்கரைந்துருகத் தன் இரு மலர்க்கைகளாலும் அதனைச் சூழ்ந்துதழுவ, அவ் அன்பின்மேலீட்டிற்கு உவந்து பெருமானும் அத்திருவுருவத் தினின்றுந் தோன்றி, அம்மையை அணைத்து மணம்புரிந்து தனது இடப்பாகத்தில் அமரவைத்தானெனக் காஞ்சிப்புராணங் கூறாநிற்கும்.* (சிவஞான முனிவரர் இயற்றிய காஞ்சிப் புராணம் தழுவக் குழைந்த படலம்)

திருவாஞ் சியத்திற் சீர்பெற இருந்து

80 மருவார் குழலியொடு மகிழ்ந்த வண்ணமும்;

-

-

திருவாஞ்சியத்தில் சீர்பெற இருந்து திருவாஞ்சியம் என்னுந் திருப்பதியில் அழகுடன் எழுந்தருளியிருந்து, மரு ஆர் குழலியொடு மகிழ்ந்த வண்ணமும் மணம் நிறைந்த கூந்தலையுடைய உமைப்பிராட்டியாரோடு மகிழ்ச்சியுற்றபடியும் என்றவாறு.

'வார்குழல்' எனப் பிரிப்பின் நீண்டகுழல் என்று பொருளுரைக்க* (தொல்காப்பியம் உரியியல் 19)

சேவகன் ஆகித் திண்சிலை ஏந்திப் பாவகம் பலபல காட்டிய பரிசும்;

சேவகன் ஆகித் திண்சிலை ஏந்தி -போர்வீரனாகித் திட்பம் வாய்ந்த வில்லைக் கையில் ஏந்திக் கொண்டு, பலபல பாவகம் காட்டிய பரிசும் - பலவகையான தோற்றங்களைக் காட்டிய தன்மையும் என்றவாறு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_25.pdf/161&oldid=1589377" இலிருந்து மீள்விக்கப்பட்டது