உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 25.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6

திருவாசக விரிவுரை

127

ஞானம்' வீடு பயக்கும் உணர்வு என்னும் பொருட்டா தலைக் பரிமேலழகியார் உரையிற் காண்க.* (திருக்குறள் 34ஆம்

அதி)

75

இடைமரு ததனில் ஈண்ட இருந்து படிமப் பாதம் வைத்தஅப் பரிசும்;

-

இடைமருது அதனில் ஈண்ட இருந்து திருவிடை மருதூரின்கட் செறிய இருந்து, படிமப் பாதம் - தெய்வவடிவான திருவடிகளை, வைத்த அப்பரிசும் - வைத்த அத்தன்மையும் என்றவாறு.

'படிமம்' தெய்வவடிவம் எனப் பொருள்படுதலைக் “கை வினைமுற்றிய தெய்வப்படிமத்து”* (சிலப்பதிகாரம் நடுக்காதை 228) என்புழியும், “கடவுள் எழுதிய படிமங் காணிய”* (மணிமேகலை வஞ்சி மாநகர் புக்கக் காதை 4) என்புழியுங் காண்க. ஏகம் பத்தின் இயல்பாய் இருந்து பாகம் பெண்ணோ டாயின பரிசும்;

-

ஏகம்பத்தின் திருக்கச்சி ஏகம்பம் என்னுங் காஞ்சிமா நகரில், இயல்பாய் இருந்து - இயற்கையாய் எழுந்தருளியிருந்து, பாகம் பெண்ணோடு ஆயன பரிசும் -இடப்பாகம் உமைப் பிராட்டியாரோடு கூடியான தன்மையும் என்றவாறு.

6

என்றது : திருக்கையிலையில்இறைவனும் இறைவியுங் காதல் விளையாட்டில் இருந்தபொழுது, அம்மை புறத்தே நின்று ஐயன் திருக்கண்களைத் தன் மென்மலர்க்ககைளாற் புதைக்க, உலகத்தின்கண் உள்ள ஞாயிறு திங்கள் வான்மீன் தீ முதலான எல்லா ஒளியுடைப் பொருள்களும் அவன்றன் அருட் கண்ணொளியால் விளங்குவனவாதலால், அவையெல் லாம் ஒளியிழந்து எங்கும் இருள, எல்லா உயிர்களும் பன்னெடுங் காலம் ஆரிடர் உழந்தன. உழவாநிற்ப, அன்னை தன் திருக் 6 கைகளை அகற்றப், பெயர்த்தும் ஞாயிறு திங்கண் முதலான எல்லாம் பண்டுபோல் ஒளியுடையவாய் விளங்கா நின்றன.

உடனே இறைவன் அம்மையை நோக்கி 'மலையரையன் பொற்பாவாய், நீ நம் கண்களை ஒரு விளையாட்டால் மறைத் தது நமக்கு ஒரு நொடிப்பொழுதே யாயினும், அஃது ஏனைக் கீழ் உலகங்களில் உள்ள மன்னுயிர்கட்கெல்லாம் பன்னெடுங்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_25.pdf/160&oldid=1589376" இலிருந்து மீள்விக்கப்பட்டது