உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 25.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

126

-

மறைமலையம் - 25

அவளையும் மனையின் புறத்தே தள்ளிக் கதவடைப்ப, மகவாய்க் கிடந்த ஐயன் தன் இயற்கைத் திருவுருங் கொண்டு, அந்நங்கை யையும் உமையினுருவாக்கி வான்மேற்கொண்டு போயினா னென்று பெரும்பற்றப்புலியூர் நம்பி திருவிளையாடல் கூறும் இப் புராணத்தின்கண் ஓரியூர் என்னும் பெயர் கூறப்பட்டில தாயினும் அடிகள் அப்பெயர் கூறுதலின் அதனை வரலாற்றின் பெய்து கூறினாம்.

"உகப்பே யுயர்தல்" என்று

வ்

(தொல்காப்பியம் உரியியல் 8) ஆசிரியர் தொல்காப்பியனார் கூறுதலின் ‘உகந்து’ என்பதற்கு விருப்பம் மிகுந்து என்று பொருளுரைக்க. அந்நங்கைமேல் இறைவன் விருப்பம் மிகுந்து போந்தமையின் இங்ஙனங் கூறினார்.

பார் - நிலம்; இழிவு சிறப்பும்மை தொக்கது. கடைப் பட்டதாகிய இந்நிலத்தின் கண்ணும் முதல்வன் அடியவள் பொருட்டுப் பாலகன் ஆயினானென்று உரைத்தருளியவாறு. ருமை - பெருமை

70 பாண்டூர் தன்னில் ஈண்ட இருந்துந் தேவூர்த் தென்பால் திகழ்தரு தீவில்

கோவார் கோலங் கொண்ட கொள்கையும்;

பாண்டூர் தன்னில் ஈண்ட இருந்தும் - திருப்பாண்டூர் என்னும் இடத்தில் செறிய இருந்தும், தேவூர்த் தென்பால் திகழ்தரு தீவில் - திருத்தேவூருக்குத் தென்பக்கத்தே விளங்கா நின்ற தீவின்கண், கோ ஆர் கோலம் கொண்ட கொள்கையும் - அரசத் தன்மை நிறைந்த திருவுருவினை மேற்கொண்ட கோட்பாடும் என்றவாறு.

ஈண்டல் - செறிதல்; இப்பொருட்டாதல் “இமிழ் கடல் வளைஇய ஈண்டகன் கிடக்கை” என்பதன்* (புறநானூறு 19) உரையிற் காண்க.

தேனமர் சோலைத் திருவாரூரின்

ஞானந் தன்னை நல்கிய நன்மையும்;

தேன் அமர் சோலைத் திருஆரின் - தேனடைகள் உள்ள சோலைகளையுடைய திருவாரூரில் ஞானம் தன்னை நல்கிய நன்மையும் - வீடு பயக்கும் உணர்வினைக் கொடுத்த நலமும் என்றவாறு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_25.pdf/159&oldid=1589375" இலிருந்து மீள்விக்கப்பட்டது