உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 25.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவாசக விரிவுரை திருமால்குடியிற் பிறந்த

125

நாள்

வர்கள் எண்ணிறந்த பாகவதரைத் தமதில்லத்திற்கு அழைத்து விருந்து செய்து வருதலைக் கண்ட அம்மாதரார் ‘நம் சிவபிரான் அடியார் இங்கு வருவதற்கும் அவர்க்கு நல்விருந்து செயதற்கும் நாம் பெற்றோம் இல்லையே!' என்ற மனத்துயரால் பெரிதுவாடி அதனை யார்க்கும் உரையாளாய் நாட்கழித்துவர, ஒரு அப்பெண்மணியாரின் மாமன் மாமி முதலான அனைவரும் இவளைத் தனியேவிட்டு ஒரு கொண்டாட்டின் பொருட்டு வேறோர் இல்லத்திற்கு ஏகினாராக, நெந்றியிற் றிருநீறு திகழச் சாத்தி முதியோன் ஒருவன் அம்மாதரார் தனியிருந்த வீட்டினுட் புகுந்தான்.புகுந்து ‘தையலாய், நமக்கு அமுது படை' எனக் கூறத், தம்பிரானடியார் வரப் பெற்றதற்கு மிக மகிழ்ந்தன ளாயினும், உணவுப் பண்டங்களையெல்லாம் ஓர் அறையினுள் வைத்துத் தன் மாமி கதவடைத்துப் போனதை நினைந்து மிக வருந்தி அதனை அம்முதியோற்கு உரைப்ப, 'நீ கதவண்டை செல்வை யேல் அது திறக்கும். நமக்கு மிகப்பசித்தலால் பருப்பும் அமுதும் அமைத்துப் படைத்தாலும் அது போதும்' என்று அப்பெரி யோன் பகன்றனன்.

அந்நங்கை அச்சொற்கேட்டுப் பதறி விரைந்து வாயிலிற் செல்லக், கதவும் சடுதியிற் றிறந்ததுகண்டு வியப்புடையளாய் உள் நுழைந்து சிறந்த பொருள்களை எடுத்து ஆக்கிப் படைக்க. அம்முதியோனும் வயிறு நிறைய உண்டபின் எழில் விளங்குந் திருவுருவினோடு ஒர் இளைஞனாய் இருக்கக் கண்டு வியப்புங் காதலும் உ டையளானாள். இதற்கிடையில் வேறோர் இல்லத்திற்குச் சென்றிருந்த அவள் மாமி திரும்பி வருவாள் எவரோ தனதகத்தே புகுந்தமையறிந்து விரைந்து உட்செல்ல, அடியார் அல்லல்களையும் ஐயனே அங்கு வந்தோ னாதலால், தன் இளமைக் கோலத்தை மாற்றி அழகிய ஒரு சிறு மகவாய் ஒரு தொட்டிலிற் கிடந்தனன். அதனைக்கண்ட மாமி பெரிதும் வெகுண்டு ‘இக்குழவி ஏது' என வினவ, ‘இங்கு வந்தா ளோர் அழகிய திருவினாள் இதனை இத்தொட்டிருள் வளர்த்தி வைத்து, இதனைப் பார்த்துக் கொள்ளென்று எனக்கு உரைத்துத் தன் கணவனோடும் போயினள்' என்று அம்மாதர் விடைகூற, மாமி பின்னுஞ் சீறி ‘நீயோ பிறர் மகவைக் காப்பாய்!' என்று சினந்துரைத்து, அக்குழவியை அவள் கைக் கொடுத்து,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_25.pdf/158&oldid=1589374" இலிருந்து மீள்விக்கப்பட்டது