உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 25.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

130

❖ 25❖ மறைமலையம் – 25

அறநூற் பொருள்கள் பலவற்றை அருளிச் செய்தும், குற்றா லத்துக் குறியாய் இருந்தும் - திருக்குற்றாலத்தில் அடையாள மாய் இருந்தும் என்றவாறு.

ம்’ வீடு எனப் பொருள்படுதலைப் பிங்கலந்தையிற் காண்க; இங்கு வீடாவது கோயில்.

‘எழில்’என்பது எழிலுடைய உருவத்தின் மேற்றாயிற்று.

'ஐயாறதனிற் சைவனாகியும்' என்றது : பண்டொரு காலத்தில் திருவையாற்றில் ஐயாறப்பருக்கு வழிபாடு ஆற்றும் இருபத்துநான்கு ஆதிசைவப் பார்ப்பனரில் ஒருவர் தம் மனைவி யையும் மைந்தனையும் விடுத்துக் காசி நோக்கிச் சென்றனராக, எஞ்சிய இருபத்துமூவரும் அவர் நெடுநாளாக மீண்டுவராமை கண்டு,அவர்க்குரிய காணி முற்றுந் தாம் பங்கிட்டுத் தமக்குரிமை யாகக்கொண்டு வாழ்ந்து வரலானார். அவர்களது செயலினை யுணர்ந்த மனைவியும் மைந்தனும் தமது பொருளைக் கவர்ந்து கொண்டது நன்றாகாதென்று வற்புறுத்தும், அவர்கள் அவர் சொற்களைச் செவிகொளாமை கண்டுவருந்தி, ஐயாறப்பர் முன் நின்று தமது குறையினைச் சொல்லி அழுதனர். அதன்பின்னர்க் காசி நோக்கிச்சென்ற சைவப்பார்ப்பனர் காசிக்கங்கை நீரும் பிறவுங்கொண்டு புகுந்து, அவ்விருபத்துமூவர்பால் வந்துநிற்ப, அவர்கள் நடுக்குற்று அவர்க்குரிய காணி யெல்லாம் அவர்க்கே திரும்பக்கொடுப்ப, அவரும் மகிழ்ந்து தாம் எடுத்துவந்த கங்கை நீராற் சிவபிராற்குத் திருமுழுக்குச் செய்வித்துப் பூசனை ஆற்றிப், பின் தம் மனைவி மைந்தர் துயரையும் போக்கித் தமது திருமடத்தின்கண் இருப்ப, அவரையே முழுதும் ஒத்த மற்றொரு வருங் காசிக் கங்கை நீர் சுமந்து அவர் எல்லாரிடத்தும் வந்து புகுத, எல்லாரும் ‘ஈதென்னை!' என்று பெரிதும் இறும்பூதுற்றுத் திகைத்தனர். முதலில்வந்த சைவப்பார்ப்பனர்க்கும் பின்வந்த சைவப் பார்ப்பனர்க்கும் இடையே வழக்குண்டாக, இருவருந் தத்தமக்குரிய முறியோலைகளைக் காட்ட இரண்டும் பெரும் பான்மையும் ஒத்திருப்பினும், சிற்சில வேறுபாட்டால் மெய்யான முறியைப் பொய்யென்றும் பொய்யானமை மெய் யென்றும் எல்லாரும் ஒருப்பட்டுக்கூற, முதல்வந்த சைவர் தாங் காட்டிய முறியே மெய்யானமைதேற்றி மறைந்தருளினார் என்பது. இவ்வாறு திருவையாற்றுப் புராணத்தின்கட் கூறப்பட்டது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_25.pdf/163&oldid=1589383" இலிருந்து மீள்விக்கப்பட்டது