உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 25.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவாசக விரிவுரை

‘கழுமலம்’ சீகாழிக்குரிய பெயர்களுள் ஒன்று.

131

மறவாது; ‘வழுக்கு’ மறதிப்பொருட்டாதல்

வழுக்காது திவாகரத்திற் காண்க.

6

'அறம்' ஈண்டு அறநூற்பொருள்; இனி அறங்கள் பல வற்றைச் செய்தருளியும் என உரைத்தலும் ஒன்று.

95

அந்தமில் பெருமை அழலுருக் கரந்து

சுந்தர வேடத் தொருமுதல் உவுருகொண் டிந்திர ஞாலம் போலவந் தருளி

எவ்வெவர் தன்மையுந் தன்வயிற் படுத்துத் தானே ஆகிய தயாபரன் எம்மிறை

கி

சந்திர தீபத்துச் சாத்திரன் ஆகி

அந்தரத் திழிந்துவந் தழகமர் பாலையுட்

சுந்தரத் தன்மையொடு துதைந்திருந் தருளியும்

அந்தம் இல் பெருமை அழல் உரக் கரந்து - முடிவில்லாத பெருமையினையுடைய தீப்பிழம்பின் உருவத்தை மறைத்து, சுந்தரவேடத்து - அழகிய கோலத்தினை யுடைய, ஒருமுதல் - ஒரு முதற்பொருளாய், உருவுகொண்டு உருவம் புனைந்து, இந்திரஞாலம் போல வந்தருளி - பெரியதொரு மாயவித்தை போல் வழியறியப்படாமல் தோன்றி, எவ் எவர்தன்மையும் தன்வயின் படுத்து - எத்தன்மைப்பட்டவர் இயல்புகளையும் தன்னிடத்தே அடங்கவைத்து, தானே ஆகிய -தான் ஒருவனே முதல்வன் ஆகிய, தயாபரன் எம் இறை அருளினால் மேலோனான எம் தலைவன், சந்திரதீபத்து - சந்திரதீபம் என்னுந் திருப்பதியிலே, சாத்திரன்ஆகி -கலைவல்லோனாய் உருவு கொண்டு, அந்தரத்து இழிந்துவந்து - இடைவெளியினூடே இறங்கிவந்து, அழகு அமர் பாலையுள் - அழகுமிக்க பாலை என்னும் தலத்தின்கண்ணே, சுந்தரத் தன்மையொடு துதைந்து இருந்தருளியும் - அழகிய இயல்போடு நெருங்கி யிருந்தருளியும் என்றவாறு.

-

-

எவ்வுலகத்துள்ள எவ்வகை யுயிர்களினும் இறைவன் ஊடுருவி நின்று அவைகளையெல்லாம் இயக்கி அவ்வவை தத்தம் இயற்கைப்படி இயங்கக்காண்டடிலனாலும், அங்ஙனம் இயங்கும் அவ்வுயிர்களின் இயல்புகள் இறைவன் இயக்கினா

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_25.pdf/164&oldid=1589385" இலிருந்து மீள்விக்கப்பட்டது